ரஜ்ஜுப் பொருத்தம் - திருமணப் பொருத்தம்

தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.
சரசோதிமலை எனும் தமிழ் ஜோதிட காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன் எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திம குறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது.
இதை நாட்டு புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின் படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு&அதன் ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனைய பொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண் & பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.
அஸ்வினி, மகம், மூலம் - பாத ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி - பாத ரஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
பரணி, பூரம், பூராடம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - தொடை ரஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - தொப்புள் ராஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
ரோகிணி, அஸ்தம், திருவோணம் - கண்ட ரஜ்ஜூ ஏறுமுகம் (ஆரோகணம்)
திருவாதிரை, சுவாதி, சதயம் - கண்ட ரஜ்ஜூ இறங்குமுகம் (அவரோகணம்)
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜு
பெண் | ஆண் | |
சிரசு ரஜ்ஜூ | கண்ட ரஜ்ஜூ உதர ராஜ்ஜு தொடை ரஜ்ஜு பாத ரஜ்ஜு |
பொருத்தம் உண்டு. |
கண்ட ரஜ்ஜு | சிரசு ரஜ்ஜு உதர ரஜ்ஜு தொடை ரஜ்ஜு பாத ரஜ்ஜூ |
பொருத்தம் உண்டு. |
உதர ரஜ்ஜு (தொப்புள் ரஜ்ஜு) | சிரசு ரஜ்ஜு கண்ட ரஜ்ஜு தொடை ரஜ்ஜு பாத ரஜ்ஜு |
பொருத்தம் உண்டு. |
தொடை ரஜ்ஜு | சிரசு ரஜ்ஜு உதர ரஜ்ஜு கண்ட ரஜ்ஜு பாத ரஜ்ஜு |
பொருத்தம் உண்டு. |
பாத ரஜ்ஜு | சிரசு ரஜ்ஜு கண்ட ரஜ்ஜு உதர ரஜ்ஜு தொடை ரஜ்ஜு |
பொருத்தம் உண்டு. |
ஆண் பெண் இருவர் நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜு வாக வரும்போது ஒன்று ஏறு முகம் மற்றொன்று இறங்கு முகமாக இருந்தால் -- சுமார் பொருத்தம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரஜ்ஜுப் பொருத்தம் - திருமணப் பொருத்தம், ரஜ்ஜு, பொருத்தம், தொடை, கண்ட, சிரசு, ரச்சு, ரஜ்ஜூ, உண்டு, அவரோகணம், ஆரோகணம், ஏறுமுகம், இறங்குமுகம், பெண், ராஜ்ஜு, திருமணப், ஜோதிடம், உண்டாகும், தொப்புள், ரஜ்ஜுப், சரடு, எனும், ஐந்து, பாதம், திருமண, வாழ்வின், ஏனைய, ஆயுளை, அமைந்த