ஜோதிடப் பாடம் – 9 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
நமது இந்து மதம் மறு பிறவியை வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவிற்கு இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம். இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நல்லது செய்தவர் இந்த ஜென்மத்தில் நல்லதை அனுபவிப்பார். பாவங்கள் செய்தவர் அதற்கு ஏற்றார் போல் கஷ்டங்களை அனுபவிப்பார். இதுதான் ஊழ்வினை என்பது. இதைப் பற்றி சிலப்பதிகாரம் விளக்கமாகவே கூறுகிறது.
1. கோவலனுக்கு ஏன் அத்தகைய மரண தண்டனை அளிக்கப் பட்டது? அவன் என்ன பாவம் செய்தான் ?
2. கற்பிற் சிறந்த கண்ணகிக்கு இந்த விதவைக் கோலம் தேவை தானா ? கணவனே கதியென்றிருந்த அவளுக்கு இந்த நிலை வேண்டுமா ?
3. மதுரை நகருக்கு இந்தக் கோலம் ஏன் ? அது தீப் பற்றி எறிவானேன் ?
இதற்கெல்லாம் சிலப்பதிகாரம் அளிக்கும் விடை "ஊழ்வினை".
கோவலன் இப்பிறவியில் நல்லவனாய் வாழ்ந்தான். சென்ற பிறவியில் ஓர் வணிகனின் மேல் பொய்க்குற்றம் சாட்டி அவன் கொலையாவதற்குக் காரணமாய் இருந்தான். கண்ணகி இப்பிறவியில் பத்தினிப் பெண்தான். ஆனால் சென்ற பிறவியில் பத்தினிப் பெண்கள் நூற்க வேண்டிய சில நோம்பினை அவள் நூற்கவில்லை. அதனால் இப்பிறவியில் அவள் கைம்மை அடைய வேண்டியதாயிற்று. மதுரைக்கு எறிந்து சாம்பல் ஆக வேண்டும் என்ற சாபம் இருந்தது. இக்காரணங்களால்தான் கோவலன் கொலை செய்யப்பட்டான்; கண்ணகி விதவை ஆனாள்; மதுரை தீப்பிடித்து எறிந்தது. போன ஜென்மத்துத் தவறுகள், பாவங்களுக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை.
அதே போன்று போனஜென்மத்தில் செய்த நற்காரியங்களுக்கு இப்பிறவியில் நல்ல பிறப்பு; நற்பயன்கள். போன ஜென்மத்தில் ந்ல்லது செய்தோமா இல்லயா என்பதை ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லிவிடலாம். 5-ம் வீட்டையும், 9-ம் வீட்டையும் வைத்துக் கூறிவிடலாம். மேற்கூறிய வீடுகளில் நல்ல கிரகங்கள் இருக்குமேயாகில் ஒருவர் போனஜென்மத்தில் நல்லவை செய்து இருக்கிறார் எனக் கொள்ளலாம்.பாவ கிரகங்கள் இருந்தால் அவர் பாவம் செய்தவர் எனக் கொள்ளலாம்.
இவைகளை எதற்கு எழுதுகிறோம் என்றால் ஜாதகத்தில் ஜெனன கால இருப்பு தெசை கணிக்க வேண்டும். ஜெனன காலத்தில் என்ன தெசை, என்ன புக்தி எவ்வளவு இருக்கிறது எனக் கணக்கிட வேண்டும்.அதைப் போட்டு விட்டால் ஜாதகம் பூர்த்தியாகிவிடும். ஒரு ஆத்மா போன பிறவியில் செவ்வாய் தெசையில் மரணம் ஆகி இருந்தால் மறுபிறவி எடுக்கும் போது அதே செவ்வாய் தெசையில் தான் பிறக்கும். அதாவது போன ஜென்மத்தில் விட்டுச் சென்ற தெசையில் இந்த ஜென்மத்தில் பிரயாணத்தைத் துவக்குகின்றது.
நாம் நமது ஜாதகத்தில் ஜனன கால இருப்பு தெசையைக் கணிப்போம். ஜனன கால இருப்பு தெசை கணிக்க சந்திரனின் நிலை தான் முக்கியம். சந்திரன் எங்கு இருக்கிறார் எனப் பாருங்கள். நமது ஜாதகத்தில் மிருகசீரிஷத்தில் இருக்கிறார். எந்தந்த நட்சத்திரத்தில் இருந்தால் என்ன தசை ஆரம்பம் ஆகும் என்பதைப் பட்டியல் போட்டுக்
காட்டியிருக்கிறோம்.
ஜனன காலத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் | ஆரம்பகால தசை |
1. அஸ்வனி, மகம், மூலம் | கேது தசை |
2. பரணி, பூரம், பூராடம் | சுக்கிர தசை |
3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் | சூரிய தசை |
4. ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் | சந்திர தசை |
5. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் | செவ்வாய் தசை |
6.திருவாதரை, ஸ்வாதி, சதயம் | ராகு தசை |
7.புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி | குரு தசை |
8.பூசம், அனுஷம், உத்திரட்டாதி | சனி தசை |
9.ஆயில்யம், கேட்டை, ரேவதி | புதன் தசை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 9 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், ஜென்மத்தில், நமது, பிறவியில், என்ன, இப்பிறவியில், இருக்கிறார், தெசை, இருப்பு, சென்ற, இருந்தால், ஜாதகத்தில், செய்தவர், செவ்வாய், ஜோதிடர், நீங்களும், பாடம், ஆகலாம், வேண்டும், தான், தெசையில், ஜோதிடம், எனக், நல்ல, வீட்டையும், கிரகங்கள், கணிக்க, சந்திரன், காலத்தில், போனஜென்மத்தில், ஜெனன, கொள்ளலாம், மதுரை, அனுபவிப்பார், பற்றி, சிலப்பதிகாரம், செய்த, நாம், பாடங்கள், இந்து, தண்டனை, அவன், கண்ணகி, பத்தினிப், கோவலன், நிலை, பாவம், கோலம், அவள்