ஜோதிடப் பாடம் – 8 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் ராசிச் சக்கரம் போடக் கற்றுக் கொண்டீர்கள். அடுத்ததாக நாம் நவாம்சம் போடத் தெரிந்து கொள்ள வேண்டும். நவாம்சம் இல்லாமல் நாம் பலன் சொல்ல முடியாது. அதாவது துல்லியம்மாகப் பலன் சொல்ல முடியாது. நவாம்சம் மட்டும் அல்ல; வேறு சில சக்கரங்களும் போட வேண்டும். அவைகள் எல்லாம் போட்டால் தான் நாம் துல்லியமகப் பலன் சொல்ல முடியும். அவைகள் எல்லாம் என்ன சக்கரங்கள் ?
1. நவாம்சம்
2. பாவம்
3. திரேக்காணம்
4. ஓரை
5. திரிசாம்சம்
6. சப்தாம்சம்
7. சஷ்டியாம்சம்.
இவைகளையெல்லாம் போட்டால் நாம் இன்னும் துல்லியமாகப் பலன் சொல்லலாம்.
ஆனால் எல்லோரும் எல்லாச் சக்கரங்களையும் போடுவதில்லை. நவாம்சம் மட்டும் தான் போடுகின்றனர். நாமும் இப்போதைக்கு நவாம்சம் மட்டும் போடக் கற்றுக் கொடுப்போம். முதலில் நவாம்சம் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நவாம்சம் என்பது ஒன்பது அம்சம் என்று பெயர். அதாவது ராசியிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் ஒன்பதாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் எப்படி ஒன்பதாகப் பிரிப்பது?
மிகவும் எளிது. ஒரு ராசிக்கு அல்லது வீட்டிற்கு ஒன்பது நட்சத்திரப் பாதம் அல்லவா ? ஒவ்வொரு நட்சத்திரப் பாதமும் ஒவ்வொரு பாகம் ஆகும். பார்த்தீர்களா! எப்படி மிக எளிதாகப் பிரித்து விட்டோம்.
நாம் முன்பு கணித்த ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இலக்கினம் முதல் ஒன்பது கிரகங்களை நாம் ராசியில் போட்டிருந்தோம். இந்த ஒன்பது கிரகங்களும், மற்றும் இலக்கினமும் எதாவது ஒரு நட்சத்திரத்தின் மேல் தான் சஞ்சாரம் செய்துகொண்டு இருக்க வேண்டும் அல்லவா? இதை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த விஷயங்களையெல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். திருகணிதப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிரக நிலைகளை 17-ம் பக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். முதலில் சூரியனைப் பாருங்கள். ஆடி 29-ம் தேதி 12 நாழிகை 28 வினாழிகைக்கு ஆயில்யம் 4-ம் பாதத்தில் இருக்கிறார். ஆடி 32-ம் தேதி 40 நாழிகை 35 வினாழிகைக்கு அவர் மகம் 1-ம் பாதத்திற்குச் செல்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆயில்யம் 4-ம் பாதத்தில்தான் இருக்கிறார். நமக்கு வேண்டியது ஆடி 30-ம் தேதி மாலை 5-00 மணி. அதாவது உதயாதி நாழிகை 27 வினழிகை 25க்கு அவர் ஆயில்யம் 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். சூரியனின் நட்சத்திரப் பாதத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
சந்திரனின் நட்சத்திரப் பாதத்தை 5-ம் பாடத்திலேயே கண்டு பிடித்து விட்டோம். அதாவது மிருகசீரிஷம் 1-ம் பாதத்தில் இருக்கிறார். இது திருகணிதப்படி. வாக்கியப்படி திருவதிரை 2-ம் பாதம் எனக் கண்டுபிடித்தோம்.
அடுத்தது செவ்வாய். அவர் ஆடி 23-ம் தேதி 16 நாழிகை 01 வினாழிகையில் இருந்து கேட்டை 3-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். ஆக செவ்வாயின் நட்சத்திரப் பாதம் கேட்டை ஆகும்.
அடுத்தது புதன் ஆகும். அவர் ஆடி 29-ம் தேதி 43 நாழிகை 47 வினாழிகையில் இருந்து 31-ம் தேதி 28 நாழிகை 42 வினாழிகை முடிய மகம் 2-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆக புதனின் நட்சத்திரப் பாதம் மகம் இரண்டு.
அடுத்தது குரு. அவர் ஆடி 15-ம் தேதி முதல் அதாவது 55நாழிகை 22 வினாழிகையில் இருந்து 32-ம் தேதி 37 நாழிகை 17 வினாழிகை முடிய திருவாதிரை 2-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆக குருவின் நட்சத்திரப் பாதம் திருவாதிரை இரண்டு.
அடுத்தது சுக்கிரன். அவர் ஆடி 29-ம் தேதி 28 நாழிகை 28 வினாழிகையில் இருந்து ஆடி 32-ம் தேதி 19 நாழிகை 18 வினாழிகை முடிய புனர்ப்பூசம் 1-ம் பாதத்தில் இருக்கிறார். ஆக சுக்கிரனின் நட்சத்திரப் பாதம் புனர்ப்பூசம் 1-ம் பாதம்.
அடுத்து வருபவர் சனி. அவர் ஆடி 2-ம் தேதியிலிருந்து அதாவது 23 நாழிகை 18 வினாழிகையில் இருந்து ரோகிணி 3-ம் பாதத்தில் இருக்கிறார். அப்படியானால் சனியின் நட்சத்திரப் பாதம் ரோகிணி 3.
கடைசியாக வருபவர்கள் ராகு, கேது. ஆடி 27-ம் தேதி 58 நாழிகை 9 வினாழிகையிலிருந்து திருவாதரை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதே போன்று கேது அதே தேதியிலிருந்து மூலம் 3-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இப்போது நவாகிரகங்களின் நட்சத்திரப் பாதத்தைத் தெரிந்து கொண்டீர்கள். நாம் இப்போது இலக்கினம் எந்த நட்சத்திரப் பாதத்தில் வருகிறது எனக்கண்டு பிடிக்க வேண்டும். இது பஞ்சாங்கத்தில் கிடைக்காது. நாம் இலக்கினம் எப்படிக் கண்டு பிடித்தோம் என்பதைப் பாருங்கள். அதாவது போன பாடத்தைப் பாருங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 8 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, நட்சத்திரப், பாதத்தில், தேதி, நாழிகை, நாம், பாதம், நவாம்சம், அவர், சஞ்சாரம், அதாவது, இருக்கிறார், வேண்டும், ஜோதிடப், செய்கிறார், இருந்து, வினாழிகையில், ஒன்பது, ஒவ்வொரு, அடுத்தது, பலன், மகம், பாருங்கள், ஆயில்யம், இலக்கினம், ஆகும், வினாழிகை, ஆகலாம், சொல்ல, தெரிந்து, ஜோதிடம், மட்டும், ஜோதிடர், தான், பாடம், முடிய, நீங்களும், கேது, இப்போது, புனர்ப்பூசம், கண்டு, வினாழிகைக்கு, இரண்டு, திருவாதிரை, தேதியிலிருந்து, கேட்டை, ரோகிணி, அல்லவா, முடியாது, அவைகள், எல்லாம், போட்டால், கொள்ள, கொண்டீர்கள், பாடங்கள், போடக், கற்றுக், என்ன, முதலில், கொள்ளுங்கள், எப்படிக், பஞ்சாங்கத்தில், எடுத்துக், விட்டோம், வீட்டையும், ஒன்பதாகப், எப்படி, கொடுத்து