ஜோதிடப் பாடம் – 7 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
26 நாழிகை 51 வினாழிகை முதல் 31 நாழிகை 36 வினாழிகை முடிய மகர இலக்கினம் வருகிறது. நமக்குக் குழந்தை பிறந்த நேரம் 27நாழிகை 25 வினாழிகை. ஆகவே மகர இலக்கினம் தான் குழந்தை பிறந்த இலக்கினம். ஆகவே மகரத்தில் "ல" என்று போடுங்கள். "ல" என்பது இலக்கினத்தைக் குறிக்கும். இப்போது ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி 30-ம் தேதிக்கு கடகம் 0.21 நாழிகை தான் இருக்கிறது. அவர்கள் 0.21 நாழிகையை எடுத்துக்கொண்டு கணக்குப் போட வேண்டும்.
இப்போது இலக்கினம் போடக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். இதற்குப் பின் நவாம்சம், ஜனன கால இருப்புதிசை, போட்டால் ஜாதகக் கணிதம் முடிந்து விடும்.

நாம் தமிழ் நாட்டிலுள்ள ஊர்களுக்குத்தான் Longtitude, Latitude கொடுத்துள்ளோம். இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களுக்குத் தேவை என்றால் "latitude, longtitudes and local meantimes for 5000 places in India" என்ற புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளவும். அதே போல் ஜாதக கணிதம் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமாயின் - First Reader (Casting of Horoscopes- by. K.S. Drishnamoorthy- என்ற புத்தகத்தைப் படிக்கவும்.
மற்றவை அடுத்த பாடத்தில்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 7 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், இலக்கினம், வினாழிகை, ஜோதிடம், ", நாழிகை, பாடம், ஜோதிடர், நீங்களும், ஆகலாம், இப்போது, இருக்கிறது, latitude, புத்தகத்தைப், கணிதம், குழந்தை, பாடங்கள், பிறந்த, ஆகவே, தான், ல"