ஜோதிடப் பாடம் – 6 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இப்போது மணி என்னவென்று கேட்டால் உடனே கையில் உள்ள கடிகாரத்தைப் பார்ப்பீர்கள். எந்த ஊராக இருந்தாலும் (இந்தியாவிற்குள்) ஒரே நேரம் தான். இதற்கு இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் எனப் பெயர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. ஊருக்கு ஊர் நேரம் வித்தியாசப் படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஊரின் longtitude, latitude வித்தியாசப் படுகிறது.
இந்தியன் ஸ்டாண்டர்ட் நேரம் என்பது ஆந்திராவிலுள்ள கோல்கொண்டாவின் ரேகாம்சம் 82 1/2 டிகிரிக்கு உள்ள நேரமாகும். இந்த நேரத்தையே இந்தியா முழுவதற்கும் நாம் வைத்துள்ளோம். ஆனால் Longtitude, Latitude க்குத் தகுந்தவாறு நேரம் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. ஊருக்கு ஊர் மாறுபடும் இந்த நேரத்திற்கு சுதேச மணி அல்லது local meantime என்று பெயர். சரி! இந்த சுதேச மணியைக் கண்டு பிடிப்பது எவ்வாறு ? அதற்கு முதலில் ஒவ்வொரு ஊரின் longtitude தெரிய வேண்டும். இதற்குப் புத்தகங்கள் இருக்கின்றன. அவைகள் ஒவ்வொரு ஊரின் Longtitude, Latitude ஆகியவற்றை அளிக்கின்றன. அந்த விபரம் எல்லாம் நாம் பின்னால் எழுதுகிறோம்.
இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியை நாம் கண்டுபிடிப்போம். தஞ்சாவூரின் ரேகாம்சம்கள் என்ன ?
Longtitude 79 Degrees 10 Minutes
Latitude 10 Degrees 47 Minutes.
இப்போது தஞ்சாவூரின் சுதேச மணியைக் கண்டு பிடிப்போம்.
இந்தியாவின் Longtitude 82. 30
தஞ்சாவூரின் Longtitude 79. 10
வித்தியாசம் 3. 20
இந்த வித்தியாசமான 3.20 ஐ 4-ல் பெருக்கவும். 13.20 நாம் ஏன் 4-ஆல் பெருக்கினோம் என்றால் பூமி ஒரு DEGREE நகர்வதற்கு 4 நிமிடங்கள் ஆகின்றன. அப்படியானால் 3 டிகிரி 20 நிமிஷம் நகர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனப் பார்த்தோம். விடை 13 நிமிஷம் 20 வினாடி ஆகும். இந்த 13டிகிரி 20நிமிஷத்தை இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம்-ல் யிருந்து கழிக்க வேண்டும். ஏன்? அதாவது இந்தியன் ஸ்டாண்டர்ட் ரேகாம்சத்திற்குக் குறைவாக இருக்கும் ஊர்களுக்கெல்லாம் நாம் கழிக்க வேண்டும். கூடுதலாக இருக்கும்ஊர்களுக்கெல்லாம் நாம் கூட்ட வேண்டும். அதாவது ஒரு ஊரின் ரேகாம்சம் இந்தியன் ஸ்டாண்டர்ட் ரேகாம்சத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தால் அந்த ஊர் இந்தியன் ஸ்டாண்டர்டு ரேகாம்சத்திற்கு மேற்கே இருக்கிறது எனப் பொருள். கூடுதலாக இருந்தால் அந்த ஊர் கிழக்கே இருக்கிறது எனப் பொருள். தஞ்சாவூரின் ரேகாம்சம் குறைவாக இருப்பதால்நாம் கழிக்க வேண்டும். நமது கணக்கு இத்தோடு முடியவில்லை. ரேகாம்சத் திருத்தம் என்று ஒன்று உண்டு. அதையும் கணக்கில்எடுத்துக்கொள்ள வேண்டும். ரேகாம்ச திருத்தம் எப்படிச் செய்யவேண்டும்?
தஞ்சாவூரின் ரேகாம்சத்தை 2-ல் பெருக்குங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 6 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, longtitude, நேரம், நாம், வேண்டும், தஞ்சாவூரின், இந்தியன், ஜோதிடப், ஸ்டாண்டர்ட், சுதேச, எனப், ஊரின், latitude, ஜோதிடர், ஆகலாம், அந்த, பாடம், குறைவாக, கழிக்க, ரேகாம்சம், நீங்களும், ஊருக்கு, இப்போது, ஒவ்வொரு, ஜோதிடம், பெயர், அதாவது, கூடுதலாக, பொருள், திருத்தம், ஆகும், இருக்கிறது, இருந்தால், minutes, உள்ள, கண்டு, மணியைக், படுகிறது, வித்தியாசப், நகர்வதற்கு, பாடங்கள், degrees, நிமிஷம்