ஜோதிடப் பாடம் – 53 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
வக்ர கதி:
இந்த ராசி மண்டலத்தில் கிரகங்கள் சமயங்களில் வக்கிரமாகிறது அல்லவா? அது எவ்வாறு ஆகிறது? வக்கிரம் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். "வக்கிரம்" என்றால் பின்னோக்கிச் செல்லுதல் எனப் பொருள். ஆனால் கிரகங்கள் எதுவும் பின்னேக்கிச் செல்வது கிடையாது. அதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அது எவ்வாறு ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். சூரியன், சந்திரன் இரண்டுக்கும் எப்போதுமே வக்கிரகதி என்பது கிடையாது. ராகு, கேதுக்கள் எப்போதுமே வக்கிரகதியிலேயே இருப்பவர்கள் என மேலே பார்த்தோம். அப்படியானால் மற்ற 5 கிரகங்களான புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்கு வக்கிர கதி உண்டா என்றால் நிச்சயம் உண்டு. இப்போது சூரிய மண்டலத்தைக் கண்முன்னே நிறுத்துங்கள். சூரியன் நடுவில் இருக்கிறார். அவரைமுதலில் சுற்றும் கிரகம் புதன். அவருடைய வட்டப் பாதை மிகச் சிறியதாக இருக்கும். இதற்கு அடுத்து சுற்றுபவர் சுக்கிரன். இவர் சுற்றும் பாதையையும் சிறியதுதான். ஆனால் புதனின் பாதையை விடப் பெரியது. அடுத்த சுற்றில் தான் நமது பூமி இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரின் வட்டப் பாதையைவிட பூமியின் வட்டப் பாதை பெரியது. புதனுக்கும், சுக்கிரனுக்கும் சுற்றும்பாதை சிறியதாக இருப்பதனால் அவைகள் "Inferior Planets" என்றழைக்கப் படுகின்றன. பூமிக்கு அடுத்து வரும் செவ்வாய், குரு, சனி ஆகியவகளின் சுற்றுப்பாதை பூமியின் பாதையைவிட மிகப் பெரியது. ஆகவே அவைகளை "Superior Planets" என்றழைக்கிறார்கள். நாம் முதலில் புதன் இப்படி வக்கிரகதியில் இருப்பதாகத் தோற்றம் அளிக்கிறது எனப் பார்ப்போம். புதன், சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வரும்போது இவ்விதமாகத் தோற்றம் அளிக்கிறது. அடுத்த பக்கம் உள்ள படத்தைப் பாருங்கள்.

‘பு-1’ என்பது புதனின் நிலை. அந்த இடத்தில் இருக்கும்போது "A" என்ற இடத்தில்துலாத்தில் இருப்பதுபோல் காட்சியளிக்கிறார். ‘பு-2’ என்ற இடத்திற்கு வரும்போது விருச்சிகத்தில் "B" என்ற இடத்தில் இருக்கிறார். ‘பு-3’ என்ற இடத்திற்கு வரும்போது தனுசுவில் "C" என்ற இடத்தில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். ‘பு-4’, ‘பு-5’ என்ற இடங்களில் இருக்கும்போது மகரத்தில் "D", "E" என்ற இடங்களில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். "பு-6" என்ற இடத்திற்கு வரும்போதுதான் வக்கிரம் ஆரம்பமாகிறது. அப்போதும் மகரத்தில்தான் இருக்கிறார் "F" என்ற இடத்திலிருந்து. ஆனால் "F" என்ற இடம் மகரத்திலேயே "E" என்ற இடத்திலிருந்து பின்னால் இருக்கிற்து பாருங்கள். "பு-7" என்ற இடம் தனுசில் "G" என்ற இடத்தில் இருக்கிறது பருங்கள். இப்போது புதனானவர் மகரத்திலிருந்து, தனுசிற்கு வந்து விட்டாரா? பின்னோக்கி வந்து விட்டாரா? "பு-8" என்ற இடம் புதன் விருச்சிகத்திற்கு வந்து விட்டதைப்போல் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆக புதனின் சிறிய சுற்றுப்பாதை புதன், பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் வரும்போது பின்னோக்கி வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கிறது.இப்போது வக்கிரகதி என்றால் என்னவென்று விளங்கிவிட்டதா? புதன் சூரியனை விட்டு ஒருராசிக்குமேல் தாண்டிப்போகமாட்டார். அதேபோல் ஒரு ராசிக்குமேல் பின்னால் செல்லவும் மாட்டார். சுக்கிரனின் வக்கிர கதியும் இவ்வாறே. சுக்கிரன், சூரியனை விட்டு 2 ராசிக்கு மேல் முன்னாலோ அல்லது பின்னாலோ போக மாட்டார்.
Superior Planets என்று சொல்லப் படுகிற செவ்வாய், குரு, சனி ஆகியவைகள் எப்படி வக்கிரகதியை அடைகின்றன தெரியுமா? இவைகளின் சுற்றும்பாதை பூமி சுற்றும் பாதையை விட மிகப் பெரியது அல்லவா? இந்த கிரகங்களுக்கும், சூரியனுக்கும் நடுவில் பூமி வரும் போது அக்கிரகங்கள், புதனைப்போல் வக்கிரமாக வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கின்றன. புதனின் வக்கிரகதியை நன்றாகப் புரிந்து கொண்டீர்களேயானால், இந்த கிரகங்களின் வக்கிரகதியும் நன்றாகப் புரியும். ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு நாட்கள் வக்கிரகதியை அடைகின்றன என்பதைக் கீழே காணலாம். புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும், சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும், செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும், குரு 120 நாட்கள் வக்கிரமாகவும், சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரகதி கிடையாது என எழுதி இருந்தோம். ஏன் ? என்ற கேள்விக்கும் பதில் சொன்னால் இன்னும் விளக்கமாக இருக்குமல்லவா? சூரியன் நிலையாய் ஓரிடத்திலேயே இருப்பதனால் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றி வருகிறது.பூமியிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் சூரியன் முன்னோக்கிச் செல்வது போலவே தோற்றம் அளிக்கிறது. ஆகவே சூரியனுக்கு வக்கிரகதி என்பதே கிடையாது. சந்திரன் பூமியின் பாதையிலேயே பூமியை¨யும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்ற தோற்றம் ஏற்படவில்லை. ஆகவே இதற்கும் வக்கிரகதி என்பதே கிடையாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 53 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ", புதன், நாட்கள், கிடையாது, வக்கிரகதி, தோற்றம், வக்கிரமாகவும், ஜோதிடப், பெரியது, எனப், பூமி, செல்வது, சூரியன், என்றால், குரு, புதனின், நடுவில், சூரியனுக்கும், செவ்வாய், வரும்போது, இடத்தில், சுக்கிரன், வட்டப், ஆகவே, வந்து, தோற்றத்தைக், வக்கிரகதியை, இடம், இடத்திற்கு, அளிக்கிறது, இருப்பதுபோல், சுற்றும், பூமியின், ஜோதிடர், ஆகலாம், பாடம், நீங்களும், ஏற்படுகிறது, ஜோதிடம், இப்போது, பார்ப்போம், இருக்கிறார், கொடுக்கிறது, பின்னோக்கி, விட்டாரா, f", இடத்திலிருந்து, பின்னால், பாடங்கள், வருவதைப், விட்டு, கொண்டு, சுற்றிக், வருவதால், பின், நோக்கிச், சூரியனையும், என்பதே, e", சூரியனை, மாட்டார், அடைகின்றன, நன்றாகப், போல், கிரகங்கள், இருக்கிறது, எப்போதுமே, பாதையைவிட, சந்திரன், சுற்றும்பாதை, அடுத்த, என்பது, சிறியதாக, பாதை, அடுத்து, வக்கிர, பாதையை, இருப்பதனால், planets", எவ்வாறு, பாருங்கள், இருக்கும்போது, அல்லவா, தோற்றமளிக்கிறார், வக்கிரம், பூமிக்கும், சுற்றுப்பாதை, வரும், மிகப், superior, எப்படி, இடங்களில்