ஜோதிடப் பாடம் – 46 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
"உத்தியோகம் புருஷ லட்சணம். எல்லோருக்கும் உத்தியோகம் கிடைத்து விட்டால் பிரச்சனை இல்லை. 1. வேலை எப்போது கிடைக்கும்? 2. பதவி உயர்வு உண்டா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்க வேண்டும். இதை எப்படி ஜோதிட ரீதியாக பதில் சொல்வது? இதைத்தான் நாம் விளக்கப் போகிறோம்.
நாம் ஏற்கனவே கூறி இருக்கிறோம். 10-ம் வீடு என்பது ஜீவனஸ்தானம் ஆகும். 6-ம் வீடென்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். அப்படியானால் 10ம் வீட்டிற்கும், 6-ம் வீட்டிற்கும் என்ன வித்தியாசம். 10-ம் வீடென்பது பொதுவாக ஜீவனத்தைக் குறிக்கிறது. ஜீவனமென்பது வியாபாரமாகவும் இருக்கலாம்; அல்லது உத்தியோக மாகவும் இருக்கலாம். ஆனால் 6-ம் வீடென்பது நாம் செய்யும் உத்தியோகத்தைமட்டும்தான் குறிக்கும். 7-ம் வீடென்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2-ம் வீடென்பது தனஸ்தானம் அல்லவா? வேலைக்குச் சென்றால் நமக்குப் பணம் கிடைக்குமல்லவா? 11-ம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும். 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருப்பின் சீக்கிரம் வேலை கிடைக்கும். சனியிருப்பின் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்குகந்த சம்பளம் கிடைக்காது. பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும். சரி! எப்போது வேலை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சூரிய தசை பாக்கி : 5 வருஷம் 8 மாதம் 02 நாட்கள்
இவர் பிறந்த தேதி : 26-11-1967.
இவர் தாம் பார்க்கும் வேலை திருப்தி அளிக்கவில்லை என்றும் வேறு வேலை கிடைக்குமா? எனவும் கேட்டார். அன்று 05-01-2006 வியாழக்கிழமை. அப்போதைய ஆளும் கிரகங்களைப் பார்த்தோம்.
அன்றைய கிழமை - வியாழன். குரு அன்றைய நாளின் அதிபதி ஆகிறார். அன்றைய நட்சத்திரம் பூரட்டாதி- ராசி - கும்பம். சனி ராசியதிபதியாகவும் குரு நட்சத்திர அதிபதியாகவும் ஆகிறார். அப்போதைய இலக்கினம் மகரம். அதன் அதிபதி திரும்பவும் சனி; இலக்கின நட்சத்திர அதிபதி சந்திரன். ஆக கீழ்வரும் கிரகங்கள் ஆளும் கிரகங்களாகின்றன.
1.குரு 2.சனி 3.குரு 4.சனி 5.சந்திரன்.
குருவின் வீட்டில் ராகு இருப்பதால் ராகுவும் ஒரு ஆளும் கிரகம் ஆகின்றார். ராகுவுக்கு சொந்தவீடு எதுவும் கிடையாதாகையால் இந்த வீட்டில் இருக்கின்றாறோ அல்லது எந்த நட்சத்திர அதிபரின் காலில் இருக்கின்றாறோ அவருடைய பலனைக் கொடுப்பார். ராகு குருவின் வீட்டில் இருப்பதோடு அன்று சனியினுடைய நட்சத்திரமான உத்திரட்டாதியில் இருக்கிறார். ஆக ராகுவும் ஒரு ஆளும் கிரகமாகின்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 46 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, வேலை, வீடென்பது, குரு, ஜோதிடப், ஆளும், கிடைக்கும், செய்யும், நாம், குறிக்கும், அன்றைய, அதிபதி, நட்சத்திர, வீட்டில், ஜோதிடர், ஜோதிடம், நீங்களும், ஆகலாம், பாடம், ஆகிறார், சந்திரன், ராகு, ராகுவும், இருக்கின்றாறோ, குருவின், வீட்டிற்கும், பதவி, எப்போது, உத்தியோகம், பாடங்கள், வேண்டும், இருக்கலாம், அன்று, இவர், கிரகங்கள், அல்லது, அப்போதைய