ஜோதிடப் பாடம் – 4 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் கிரகங்களின் சொந்த வீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். சரி! கிரகங்களுக்குச் சொந்த வீடு இருந்து என்ன பயன் ? அது ஜோதிடத்திற்கு எந்த விதத்தில் உதவுகிறது ? இப்போது அதைத் தெரிந்து கொள்வோம். ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும். உதாரணத்திற்குக் கீழே உள்ள ராசிக் கட்டத்தைப் பாருங்கள்.

இதில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். கடகம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு பலம் அதிகரிக்கிறது. ஆகவே அவர் தன் தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்வார். சந்திர தசையோ, அல்லது சந்திர புக்தியோ அவருக்கு நல்லதையே செய்யும். அதே போன்று மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் அவர் நல்லதையே செய்வார். கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி நாம் கீழே எழுதி இருக்கிறோம். சொந்த, உச்ச, மூலத் திரிகோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே
செய்யும் என்பது ஜோதிட விதி. நீச்ச வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதைச் செய்யாது என்பதுவும் ஜோதிட விதி. இதைத் தவிர சந்திரன் மனது, தாயார்- ஆகியவைகளுக்கு காரகம் வகிப்பவர். சந்திரனை வைத்துத்தான் நாம் ஒருவரின் மனநிலையையோ, அல்லது தாயாரையோ கூற வேண்டும். மேற் கண்ட உதாரண ஜாதகத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் நல்ல மனநிலையுடன் இருப்பார் எனக்கொள்ளலாம். தாயாரும் நல்ல விதமாக இருப்பார் எனக்கொள்ளலாம். சந்திரனுடன் ராகு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அந்த ஜாதகர்மிகுந்த சுயநல வாதியாக இருப்பார். சனி இருந்தால் அவர் எதையும் மறைக்கக் கூடியவறாக இருப்பார். வெளிப் படையாக எதையும் கூற மாட்டார். (HE WILL BE A SECRETIVE PERSON). கீழே உச்ச, நீச்ச, மூலத்திரிகோண வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
.
கிரகங்கள் | உச்ச வீடு | மூலத்திரிகோண வீடு | நீச்ச வீடு |
சூரியன் | மேஷம் | சிம்மம் | துலாம் |
சந்திரன் | ரிஷபம் | ரிஷபம் | விருச்சிகம் |
செவ்வாய் | மகரம் | மேஷம் | கடகம் |
புதன் | கன்னி | கன்னி | மீனம் |
குரு | கடகம் | தனுசு | மகரம் |
சுக்கிரன் | மீனம் | துலாம் | கன்னி |
சனி | துலாம் | கும்பம் | மேஷம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 4 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, சொந்த, நல்லதையே, வீடு, ஜோதிடப், உச்ச, வீட்டில், நீச்ச, சந்திரன், இருப்பார், செய்யும், கடகம், கீழே, மூலத்திரிகோண, துலாம், மேஷம், கிரகங்கள், கன்னி, அவர், அவருக்கு, ஜோதிடர், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடம், பலம், நல்ல, இருக்கிறார், விதி, ஜோதிட, பாடங்கள், எனக்கொள்ளலாம், எதையும், மகரம், புக்திக், ரிஷபம், உள்ள, இருக்கும், மீனம், வீடுகளில், செய்வார், சந்திர, கிரகம், இருப்பதால், இருந்தால், அல்லது, தெரிந்து, காலங்களில், நாம், திரிகோண, மூலத், கிரகங்களின், அதிக