ஜோதிடப் பாடம் – 36 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
11-ம் வீட்டில் உள்ள கிரகங்கள் என்ன பலன் கொடுக்கின்றன என்பதைப் பார்ப்போம். சூரியன் இருந்தால் உயர்ந்த லட்சியம் உள்ளவராகவும் அவைகளை அடைவதற்குப் பாடுபடுவர் எனவும் கொள்ளலாம். நல்ல உயர்ந்த பதவியிலுள்ளவர்கள் நண்பர்களாக அமைவர். ஆகையால் அத்தகைய நண்பர்களிடமிருந்து பயன் பெறுவர். பொது வாழ்விலும் பெறுமை பெறுவர்.
சந்திரன் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். சந்திரன் நிலையற்றவர் என்றும் அடிக்கடி மாறும் சுபாவம் உள்ளவர் எனறும் உங்களுக்குத் தெரியும். ஆகவே அடிக்கடி நண்பர்களை மாற்றிக் கொண்டிருக்கும் சுபாவம் உள்ளவராக இருப்பார். சந்திரன் ஸ்திர ராசியில் இருந்தாலோ அல்லது ஸ்திர ராசியிலுள்ள கிரகத்தால் பார்க்கப் பட்டாலோ இவ்வாறு அடிக்கடி மாற்றும் சுபாவம் இருக்காது. சந்திரன் பெண் கிரகமல்லவா? ஆகவே 11-ல் சந்திரன் உள்ள ஜாதகருக்கு பெண் நண்பர்கள் இருப்பார்கள்.
செவ்வாய் ஒரு தைரியமுள்ள கிரகம். அதை ஒரு முரட்டு கிரகம் என்று கூடச்சொல்லலாம். சுபரின் (குரு, புதன், சுக்கிரன்) பார்வை இருந்தால் நண்பர்களுடன் ஒத்துப் போகும் சுபாவம் இருக்கும். இல்லையென்றால் அவர்களுடன் சண்டைதான் மிஞ்சும்.
புதனும் ஒரு நிலையில்லாத கிரகம். அடிக்கடி மாறும் குணமுள்ளது. புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் கிரகம். ஆகவே படித்த, புத்திசாலியான நண்பர்களை இந்த ஜாதகர் பெற்றிடுவர். தீய கிரகங்கள் பார்வை இருப்பின் நண்பர்களால் துன்பம் உண்டாகும்.
குரு 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பண வசதியுள்ள தயாள குணமுள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். பல வழிகளிலும் உதவும் நண்பர்களைப் பெற்றிடலாம் குருவின் மூலமாக.
அடுத்தது சுக்கிரன். அவர் இங்கு இருந்தால் பெண் நண்பர்கள் அதிகமிருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்கும். கலையார்வமிக்க நண்பர்கள் இருப்பார்கள். சுக்கிரன் பொது வாழ்க்கையைக் குறிக்கிறார். சுக்கிரன் 11-ல் இருக்கப் பிறந்தவர்கள் பொதுவாழ்வில் வெற்றி பெறுவர்.
சனியானவர் 11-ல் இருக்கப் பிறந்தவருக்கு அவரை விட மூத்தவயதினர் நண்பர்க ளாக இருப்பர். அல்லது அவரைவிட சமூக அந்தஸ்தில் கீழாக உள்ளவரை நண்பர்களாகப் பெறுவர். சனி சில நண்பர்களைக் கொடுப்பர்; ஆனால் குருவானவர் அதிக அளவு நண்பர்களைக் கொடுப்பார். சனியானவர் பாபகிரகங்களின் சம்மந்தப்பட்டால் இந்த ஜாதகர் நண்பர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாற்றப்படுவர். 11-ம் இடமென்பது ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றும் இடமாகையால் அங்கு சனி இருப்பது அவ்வளவு விரும்பத்தக்கது அல்ல; அவரின் ஆசைகள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 36 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், சந்திரன், இருந்தால், நண்பர்கள், பெறுவர், சுக்கிரன், கிரகம், சுபாவம், அடிக்கடி, நீங்களும், பெண், பாடம், ஜோதிடம், ஆகலாம், ஆகவே, ஜோதிடர், குரு, இருப்பார்கள், பார்வை, சனியானவர், நண்பர்களைக், இருக்கப், கிடைப்பார்கள், ஜாதகர், இருக்கும், நண்பர்களை, உள்ள, உயர்ந்த, பார்ப்போம், பலன், என்ன, நல்ல, வீட்டில், கிரகங்கள், ஸ்திர, மாறும், பாடங்கள், பொது, அல்லது