ஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
பதில் :கால் நடைகளைக் குறிப்பது சுக்கிரன். தோலைக் குறிப்பது சனி. தோல்பதனிடும் இயந்திரங்களைக் குறிப்பது செவ்வாய். ஆக இந்த மூன்றின் சேர்க்கைதான் ஒருவருக்கு தோல் பதனிடும் வேலையைக் கொடுக்க முடியும்.
கேள்வி : இப்போது எல்லோரும் Engineering College -ல் சேர்ந்து படிக்கிறார்கள். அப்படிப் படிக்க என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?
பதில் :பொதுவாக Engineering என்றாலே புதன்தான் அதற்குக் காரகம் வகிக்கிறார். Mechanical Engineering என்றால் புதனுடன் செவ்வாயும் சேர வேண்டும். Marine Engineering என்றால் புதன், செவ்வாயுடன் சந்திரனும் சேர வேண்டும்.
நாம் மேலே பல தொழில்களுக்குண்டான கிரகச் சேர்க்கையைக் கூறி இருந்தோம். உங்களுக்கு பல தொழில்களை எப்படி கிரகச் சேர்க்கை மூலம் தேர்ந்தெடுப்பது என்பதை விளக்குவதற்காகவே கூறி இருந்தோம். ஒருவரின் தொழிலைக் கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் ஒரு கிரகத்துக்குப் பல காரகத்து வங்கள் இருப்பதால் அதைக் கூர்ந்து கவனித்துக் கூற வேண்டும். இல்லையென்றால் நகைப்புக்குள்ளாவீர்கள்.
இப்போது ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்:
ராசி : தனுர் இலக்கினம்; இலக்கினத்தில் சுக்கிரன்; 2-ம் வீட்டில் சந்திரன்; 4-ம் வீட்டில் கேது; 5-ம் வீட்டில் செவ்வாய்; 10-ம் வீட்டில் ராகு; 11-ம் வீட்டில் குரு; 12-ம் வீட்டில் சூரியன், புதன், சனி;
நவாம்சம் : ரிஷப இலக்கினம்;இலக்கினத்தில் சுக்கிரன்; 2-ல் குரு;4-ல் சிம்மத்தில் சந்திரன், ராகு; 6-ல் புதன்; 8-ல் செவ்வாய்;10-ல் கேது; 11-ல் சூரியன், சனி;
இவர் என்ன தொழில் என்று கூற முடியுமா? 10-ம் வீட்டிற்கு அதிபதி புதன்; அவர் சுக்கிரன் நவாம்சத்தில் இருக்கிறார்; புதன் ராசியில் செவ்வாய் வீட்டில் இருக்கிறார். ஆக புதன், செவ்வாய், சுக்கிரன் இவருக்கு தொழிலைக் கொடுக்க வேண்டும். நாம் சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.
1. புதன் Engineering கல்விக்கு அதிபதி; கூட செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் இவர் ஒரு Mechanical Engineer- ஆக இருக்கக் கூடும். சுக்கிரனும் சேர்ந்து இருப்பதால் போக்குவரத்து சம்மந்தமான துறையில் இவர் Engineer ஆக இருக்கக்கூடும்.
2. புதன் புத்தகங்களுக்கு அதிபதி; அவர் செவ்வாய் வீட்டில் இருப்பதால் புத்தகம் அச்சிடும் வேலையில் இருக்கலாம்; சுக்கிரனும் சம்மந்தப் பட்டுள்ளதால் பெண்கள் சம்மந்தமான புத்தக வெளியீடுகளிலோ அல்லது சினிமா சம்மந்தப் பட்ட புத்தகங்களிலோ இருக்கலாம்; இவ்வாறு பல தொழில்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இருப்பினும் இவர் எங்கு வேலை பார்த்தார் என்று சொல்லிவிடுகிறோம்.
புதன் அதிபதியாக இருக்கும் Accounts - தொழிலில் B.Com பட்டதாரியானார். சுக்கிரன் சம்மந்தப்பட்ட Fertiliser-களைத் தயாரிக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். ஒருகிரகம் பல தொழில்களைக் குறிப்பதால் ஒருவர் தொழிலைக் குறிப்பிடுவது மிக சிரமமான காரியம். அனுபவம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தர வேண்டும். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, புதன், வீட்டில், வேண்டும், செவ்வாய், சுக்கிரன், engineering, ஜோதிடப், இவர், இருப்பதால், சேர்ந்து, கிரகச், தொழிலைக், பாடம், அதிபதி, ஜோதிடம், குறிப்பது, ஜோதிடர், நீங்களும், ஆகலாம், குரு, ராகு, சூரியன், engineer, இருக்கலாம், சம்மந்தப், தொழில்களைக், சம்மந்தமான, சுக்கிரனும், இருக்கிறார், பார்ப்போம், கேது, அவர், நாம், இப்போது, என்ன, முடியும், கொடுக்க, பாடங்கள், பதில், சேர்க்கை, mechanical, இலக்கினம், இலக்கினத்தில், இருந்தோம், கூறி, என்றால், செவ்வாயும், சந்திரன்