ஜோதிடப் பாடம் – 2 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
திருகணிதமா அல்லது வாக்கியமா ?
கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய காலத்திற்குச் செல்வோம். அக்காலம் தான் "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்க்ப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஒட்டி பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன. கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கியப் பஞ்சங்கம்" எனப்பட்டது.
வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டனர் அதற்குப் பிறகு வந்த பெரியவர்கள். அவைகளை திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் "திருகணித முறை" எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் "திருகணிதம்" பஞ்சாங்கம் எனப் படும். அப்படியானால் நாம் எந்தப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்த வேண்டும்? இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கின்றதே! இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "டெலஸ் கோப்புகள்" வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆக திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளனர் இக்காலத்தில். ஆகவே திருகணித முறை தான் சிறந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று பழமையைக் கொண்டாடுகிறார்கள். நாம் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவோம்.
காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருதமும்" திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது. மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகையும்" இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. (உத்திர காலம்ருதம், பலதீபிகை எல்லாம் ஜோதிட நூல்கள்.)
சரி! திரு கணிதப் பஞ்சாங்கங்கள் எவை?
1.ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியாள் மடத்துப் பஞ்சாங்கம். 2.ஸ்ரீ காஞ்சி ஆச்சாரியாள் பாரத் கணிதப் பஞ்சாங்கம் 3.ஆனந்த போதினி திருகணிதப் பஞ்சாங்கம்
இவைகள் எல்லாம் திருகணிதப் பஞ்சாங்கம். இவைகள் மூலம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் சரியாக வரும். தவறு வர வாய்ப்பில்லை. ஆகவே நீங்களும் திருகணிதம் தான் உபயோகிக்க வேண்டும் என்று கூறுவோம்.
இப்போது கடிகாரங்கள் இருக்கின்றன. அவை என்ன மணி, எத்தனை நிமிஷங்கள் எத்தனை வினாடிகள் என்று காட்டுகின்றன. இது நமக்கு வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்தமுறை. ஆனால் நமது பண்டைய முறை அப்படி அல்ல. அவர்கள் கணக்கு எல்லாம் நாழிகை, வினாழிகையில் வரும். அந்தக் கணக்கை நாம் கீழே கொடுத்துள்ளோம்.
60 வினாழிகை | 1 நாழிகை |
60 நாழிகை | 1 நாள் |
2 1/2 நாழிகை | 1 மணி |
2 1/2 வினாழிகை | 1 நிமிஷம் |
இந்தக் கணக்கு மனப்பாடமாகத் தெரிந்து இருக்க வேண்டும். இது இல்லாமல் நாம் எந்தக் கணக்கும் போட முடியாது.
அடுத்தது நாள் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01க்கு மறுநாள் பிறந்து விடுகிறது. இது நமக்கு ஆங்கிலேயர் சொல்லிக்கொடுத்த முறை. இரவு 12.01மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள். நமது பண்டைய முறை அப்படி அல்ல. இன்று சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் முடிய ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.
சூரிய உதயம் எத்தனை மணிக்கு ஆகிறது என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? யாரைக் கேட்டால் தெரியும்? யாரையும் கேட்க்க வேண்டாம். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். வரும் இதழ்களில் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது? என்று சொல்லிக்கொடுக்கிறோம். நாம் திருகணிதப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகின்றோம். இருப்பினும் நாம் வாசகர்களின் உபயோகத்திற்காக வாக்கியப் பஞ்சாங்கத்தையும் உபயோகிக்கிறோம். எல்லோரும் பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு சந்திப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 2 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, முறை, ", நாள், நாம், திருகணித, பஞ்சாங்கம், பஞ்சாங்கங்கள், தான், ஜோதிடப், எல்லாம், எத்தனை, உதயம், நாழிகை, சூரியோதயம், வேண்டும், நீங்களும், பாடம், ஜோதிடர், வாக்கியப், திருகணிதப், முடிய, ஜோதிடம், வரும், இரவு, ஸ்ரீ, ஆகலாம், மணிக்கு, ஆகிறது, கணித, பாடங்கள், நமக்கு, என்ன, சொல்லிக், ஜாதகம், தெரியும், இவைகள், நமது, பண்டைய, ஆச்சாரியாள், வினாழிகை, காலை, தெரிந்து, கணக்கு, அல்ல, மறுநாள், கொள்ளுங்கள், அப்படி, சூரிய, கணிதப், முறையில், கிரகங்களின், இந்தப், கண்டனர், அதற்குப், வந்த, எனப்பட்டது, முறையைக், வேகம், கண்டு, வாக்கிய, முறை", பிறகு, பெயர், முறைதான், ஆகவே, உத்திர, எனக், காலம், சரியான, இல்லாமல், எனப்படும், கணிக்கப், வகையான, பஞ்சாங்கத்தைப், முறையும், காஞ்சி