ஜோதிடப் பாடம் – 25 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
மரணம் என்பது ஒருவரின் வாழ்வின் முடிவில் வருவது. அதற்குமுன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே 8-ம் வீட்டின் மற்ற காரகத்துவங்களையும் பார்ப்போம். நாம் வியாபாரம் செய்கின்றோம் என்று கொள்ளுங்கள். ஒருவரிடம் வாங்கி மற்றொரு வருவரிடம் விற்பனை செய்கிறோம். நாம் வாங்குபவரையும், நம்மிடம் வாங்குபவரையும் குறிப்பது 7-வது வீடு. அவருடைய தனஸ்தானத்தைக் குறிப்பது 7-க்கு 2-ம் வீடான 8-ம் வீடு. 8-ல் நல்ல கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றும் 8-ல் பாப கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் வளமற்று இருக்குமென்றும் கூறலாம். நீங்கள் ஒருவருடன் கூட்டு வியாபரம் செய்ய விரும்புகிறீர்கள் எனக் கொள்ளுங்கள். உங்கள் பாகஸ்தரைக் குறிப்பது 7-ம் வீடு. அவருடைய தனத்தைக் குறிப்பது 7-க்கு இரண்டாம் வீடாகிய 8-ம் வீடு. 8-ம் சுபக்கிரகங்கள் இருந்தால் அவர் இந்த கூட்டு வியாபாரத்தால் நன்மை பெறுவார் எனக் கொள்ளலாம். கெட்ட கிரகங்கள் இருந்தால் இந்த வியாபாரத்தால் அவருக்கு அனுகூலமில்லை எனக் கூறிவிடலாம்.
8-ம் வீடு என்பது இந்த பிரபஞ்சத்திலுள்ள மறைந்திருக்கும் உண்மைகளைக் குறிக்கிறது. அங்கு குருவோ அல்லது சனியோ ( இரண்டும் வேதாந்தத்தைக் குறிக்கின்ற கிரகங்கள்) இருக்குமேயானல் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உண்மைகளைக் கண்டறிய முற்படுவார். புதனும் அப்படித்தான். புதன் மிகவும் புத்திசாலித்தனமான கிரகம் அல்லவா? 8-ல் புதனிருக்க அவரும் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய முற்படுவார். ஜோதிட சாஸ்த்திரமும் பிரபஞ்ச ரகசியம் தானே. அதில் உள்ள ரகசியங்களையும் கண்டறிய முற்படுவார்.
4-வது வீடென்பது ஒருவரின் பூர்வீக சொத்தைக் குறிக்கிறது. அதில் சுபக்கிரகங்கள் இருந்தால் பூர்வீக சொத்துக் கிடைக்கும். எப்படி? ஒருவர் ஜாதகத்தில் 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 8-ம் வீடென்பது பூர்வீக சொத்தையும் குறிக்குமென்று கூறினோம். 9-ம் வீட்டிற்கு 8-ம் வீடு எது? 4-ம் வீடல்லவா? ஆகவே 4-ம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால் ஒருவருக்கு பூர்வீக சொத்துக் கிடைக்குமென்று கூறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 25 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருந்தால், வீடு, கிரகங்கள், ஜோதிடப், செவ்வாய், மரணம், குறிப்பது, அவருடைய, பூர்வீக, அல்லது, அங்கு, முற்படுவார், நாம், குறிக்கிறது, கண்டறிய, எனக், அதில், ஆகலாம், அவர், ஜோதிடர், நீங்களும், பாடம், கூறலாம், ஜோதிடம், உண்மைகளைக், சம்பவிக்கும், பிரபஞ்சத்திலுள்ள, வியாபாரத்தால், சுபக்கிரகங்கள், வீட்டுடன், சம்மந்தப், ஒருவருக்கு, சொத்துக், வீடென்பது, பிரபஞ்ச, அல்லவா, பாடங்கள், கூட்டு, கொள்ளுங்கள், வாங்குபவரையும், ஆகவே, ஒருவரின், என்பது, மிகவும், பொதுவாக, இருக்குமென்றும், பொருளாதாரம், இருக்கும், க்கு, ஆயுள்