ஜோதிடப் பாடம் – 24 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
7-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் புதனுடைய வீட்டிலும் அதாவது கன்னியிலும், 5-ம் வீட்டின் அதிபதி புதன் 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை ஆகி யிருக்கிறார்கள் பார்த்தீர்களா! இந்த தோஷமானது அவர்களை விவாகரத்துவரைக்கும் கொண்டுபோய் விட்டது. இதில் இன்னொன்று கவனிக்க வேண்டிய விஷயம். புதனானவர் 7-ம் வீட்டுடன் நிறைய சம்மநதப் பட்டு விட்டார். 7-ம் வீட்டில் இருப்பதோடு 7-ம் வீட்டின் அதிபதியும் புதன் வீடான கன்னியில் இருக்கிறார். ஆகவே 7-ம் வீடானது புதனுடன் நிறைய சம்மந்தப் பட்டு விட்டது. புதன்தான் இரட்டைக் குணம் உடைய வராயிற்றே. ஆக இரண்டு திருமணத்தைக் கொடுக்கும் யோகத்தை அளிக்கிறார். 7-ல் சூரியன் இருந்தாலும் திருமணவாழ்க்கை சுகப்படாது என்ற கருத்தும் உண்டு. இனி 7-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
சூரியன் : திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும்.
சந்திரன் : காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார்.
செவ்வாய் : திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும்.
புதன் : பாபருடன் இருந்தால் 2-வது திருமணம் உண்டு. வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர்.
குரு : நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சுக்கிரன் : மனதுக்கு இனிமையான வாழ்க்கை அமையும். காமம் மிகுந்தவர்.
சனி : திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.
ராகு : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள். ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.
கேது : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.
இதுவரையில் 7-வது வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி 8-ம் வீட்டைப், பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 24 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், வாழ்க்கை, இருந்தால், இருக்கும், திருமண, இருக்காது, வாழ்க்கைத், சந்தோஷமாக, புதன், நீங்களும், ஜோதிடர், ஜோதிடம், வீட்டின், ஆகலாம், பாடம், காமம், இருப்பார், திருமணம், ஆணாக, தொடர்பு, துணை, கள்ளத்தனமான, வீட்டைப், திருமணவாழ்க்கை, வீட்டிலும், விட்டது, செவ்வாய், அதிபதி, பாடங்கள், நிறைய, பட்டு, உண்டு, சுகப்படாது, சூரியன், வீட்டில், பார்ப்போம்