ஜோதிடப் பாடம் – 24 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.
* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.
* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.
* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.
* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.
* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?
* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.
* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?
* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.
* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.
* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!
* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 24 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருந்தால், அல்லது, வீட்டில், வீடு, வாழ்க்கை, நல்ல, அல்லவா, ஜோதிடப், கணவன், குறிக்கிறது, வீட்டு, அமையும், மனைவி, வாழ்க்கைத், இருப்பர், கிடைக்கும், ஜோதிடர், ஜோதிடம், பாடம், நீங்களும், ஆகலாம், அதிபதி, கூடும், வெளி, இருக்குமேயாகில், துணை, ஸ்தானம், அமைவாள், இடத்திலிருந்து, வெளிநாட்டில், இளைய, ஜாதகர், இருக்கலாம், பாடங்கள், ஏனெனில், மணம், மறைவு