ஜோதிடப் பாடம் – 2 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
என்னுடைய ஜன்ம நட்சத்திரம் மூலம். ஒருவருக்கு ரேவதியாக இருக்கலாம், இன்னும்
ஒருவருக்கு கார்த்திகையாக இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு நட்சத்திரம் 27
நட்சத்திரங்களில் ஒன்று ஜன்ம நட்சத்திரமாக இருக்கும். நம் ஜன்ம நட்சத்திரத்தை
எவ்வாறு தெரிந்து கொள்வது? பஞ்சாங்கத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள
வேண்டும்.
பஞ்சாங்கம் என்றால் என்ன ?
பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது.
அவையாவன :
1.திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.யோகம்
5.கரணம்.
இந்த ஐந்தையும் நாம் பஞ்சாங்கதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். முதலில் நட்சத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு நாம் திதி, வாரம், யோகம், கரணம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நாம் எல்லா கிரகங்களும் வான மண்டலத்தைச் சுற்றி வருகின்றன என்று கூறி இருந்தோம். வான மண்டலத்தில் 27 நட்சத்திரங்களும் பரவி இருக்கின்றன. அவைகளின் மேல் தான் 9 கிரகங்களும் வலம் வருகின்றன. சென்ற பாடத்தில் வான மண்டலத்தை 12 பகுதியாகப் போட்டு காட்டி இருந்தோம். அந்தப் 12 பகுதியையும் நாம் ராசி என்றோ அல்லது வீடு என்றோ இனிக் கூறுவோம்.
ராசியில் 1ம் எண் போடப்பட்ட வீடு அல்லது ராசியின் பெயர் மேஷம்.
1 - மேஷம்இப்போது 12 ராசிகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 12 ராசியிலும் நாம்
2 - ரிஷபம்
3 - மிதுனம்
4 - கடகம்
5 - சிம்மம்
6 - கன்னி
7 - துலாம்
8 - விருச்சிகம்
9 - தனுசு
10 - மகரம்
11 - கும்பம்
12 - மீனம்.
27 நட்சத்திரத்தையும் அடைக்கப்போகிறோம்.

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர். ஆக 4 பாதங்கள் கொண்டது ஒரு நட்சத்திரம். இப்போது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம். முதல் ராசி அல்லது வீடான மேக்ஷத்திற்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம். ஆக மொத்தம் 9 பாதங்கள். அதைப் போல் ஒவ்வொரு ராசிக்கு எந்தெந்த நட்சத்திரங்கள் அடங்கி இருக்கின்றன எனப் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 2 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, தெரிந்து, பாதங்கள், நாம், ஜோதிடப், இப்போது, நட்சத்திரம், ஆகலாம், ஜோதிடர், நீங்களும், பாடம், ஜோதிடம், ஒவ்வொரு, ஜன்ம, அல்லது, ராசி, பெயர், என்றோ, வீடு, நட்சத்திரத்திற்கு, போகிறோம், ராசிக்கு, அடைக்கப், இருக்கின்றன, கொண்டீர்கள், பாதம், மேஷம், கரணம், பஞ்சாங்கம், என்றால், நட்சத்திரத்தை, இருக்கலாம், பாடங்கள், ஒருவருக்கு, கொண்டது, திதி, கிரகங்களும், வருகின்றன, கொள்வோம், பற்றித், வாரம், யோகம், இருந்தோம்