ஜோதிடப் பாடம் – 17 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
4-ம் வீடு என்பது தற்போது குடியிருக்கும் ஊரைக் குறிக்கும். ஆகவே செவ்வாய் புக்தியில் பழையபடி சொந்த ஊரிலேயே வேலைசெய்யும்படியாக மாற்றல் ஆகிவிட்டது. ஆக இப்போது 3-ம் வீடு எப்படி பயணத்தைக் கொடுக்கிறது என்பது விளங்கி இருக்கும். 3-ம் இடம் என்பது தைரியஸ்தானம் அல்லவா? 3-ல் சனி இருந்தால் அவர் மிக நிதானமாகச் செயல்படுவார். அதே இடத்தில் செவ்வாய் இருந்தால் மிக துணிச்சலாக நிதானமிழந்து அவசரப்பட்டு செயல் படுவார்.
இளைய சகோதரம், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். கடிதப் போக்குவரத்து, எல்லாவிதமான செய்திகள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். உங்களுக்கும் இளைய சகோதரத்திற்கும் நல்லுரவு இருக்குமா அல்லது இருக்காதா என்பதையும் 3-ம் வீட்டை வைத்துச் சொல்லலாம். 3-ம் வீட்டில் சனி இருப்பாரேயாகில் உங்களுக்கும் உங்கள் சகோதரத்திற்கும் திருப்தியான உறவு இருக்காது; குரு இருந்தால் நல்லுறவு; செவ்வாய் இருந்தால் சண்டை; இவ்வாறாகப் பலன் கூறலாம். 3-ம் வீடு ஏஜென்சித் தொழிலையும் குறிக்கும். 3-ம்வீடும் 2-ம்வீடான தனஸ்தானத்துடனோ, அல்லது 6-ம் வீடான தொழில் ஸ்தானத்துடனோ, அல்லது 10ம் வீடான ஜீவனஸ்தானத்துடனோ சம்மநதப்பட்டு இருந்தால் ஒருவர் Agency தொழில், Broker ஆகிய தொழில் செய்வர். 3-ம் வீட்டில் ஒருவருக்கு கேது இருப்பாரேயாகில் அவரை நாரதர் என்று கூறலாம். ஏனெனில் அவரால் அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருக்க முடியாது.
நீங்கள் ஒரு வீட்டில் இருக்கிறீர்கள். அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்றால் 3-ம் வீட்டின் தசை, அல்லது புக்தி காலங்களில்தான் செய்ய முடியும். 4-ம் வீடு என்பது தற்போது குடிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. 4-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3-ம் வீடல்லவா? ஆக 3ம் வீட்டக் குறிக்கும் தசை அல்லது புக்தியின் போதுதான் நாம் வேறு வீடு குடி செல்ல முடியும்.
உடல் உறுப்புக்களில் காது, கை, தொண்டை, தோள்பட்டை ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். 3-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் மேற்கண்ட உறுப்புக்களில் ஏதாவது தொந்தரவு இருக்கும்.ஒருவர் மருத்துவராக இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். மருத்துவத்திற்குக் காரகம் வகிப்பவர் சூரியன். அதனால்தான் அவர் தன்வந்திரி என்று அழைக்கப் படுகிறார். அவர் 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் ஒருவர் மருத்துவராக முடியம். சரி! ஒருவர் மருத்துவராகிவிட்டார். 10-ம் வீட்டதிபதி 3-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் அவர் எந்தத் துறையில் மருத்துவராக முடியும். சொல்லுங்கள் பார்ப்போம்? 3-ம் வீடு காதைக் குறிக்கிறது அல்லவா? அவர் E.N.T டாக்டராக இருப்பார். நாம் சொல்லும் விளக்கம் உங்களுக்கு இப்போது புரிந்து இருக்குமென நினைக்கிறோம். ஜீவன, மற்றும் தொழில் ஸ்தானத்தைப் பற்ரிப் பார்க்கும்போது இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.
ராசிகளில் ஆண்ராசி, பெண்ராசி என்று உண்டென்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல் கிரகங்களிலும் ஆண் கிரகங்கள், பெண் கிரகங்கள், அலி கிரகங்கள் என்று உண்டு. அவையாவன...
ஆண்கிரகங்கள் : சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்றும் ஆண் கிரகங்கள் எனப்படும்.
பெண் கிரகங்கள் : சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் பெண் கிரகங்கள் எனப்படும்.
அலி கிரகங்கள் : புதன், சனி, கேது ஆகிய மூன்றும் அலிக்கிரகங்கள் எனப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 17 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, கிரகங்கள், அவர், வீடு, இருந்தால், ஜோதிடப், அல்லது, தொழில், வீட்டில், ஒருவர், செவ்வாய், ஆகிய, என்பது, பாடம், மருத்துவராக, நீங்களும், ஜோதிடம், வீடுதான், முடியும், குறிப்பதும், மூன்றும், குறிக்கும், பெண், எனப்படும், ஆகலாம், ஆகியவற்றைக், ஜோதிடர், குறிக்கிறது, செய்ய, பார்ப்போம், சூரியன், வீட்டுடன், உறுப்புக்களில், வீட்டைக், நாம், குரு, இருக்கும், அல்லவா, இப்போது, தற்போது, பாடங்கள், இளைய, உங்களுக்கும், வீடான, கேது, கூறலாம், இருப்பாரேயாகில், சகோதரத்திற்கும், உண்டு