ஜோதிடப் பாடம் – 16 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
2-ம்வீட்டில் சூரியனும், சந்திரனும் சேர்நது இருந்தால் கண் பார்வையில் குறை இருக்கும். 2-ம் வீட்டு அதிபர் 6 அல்லது 8 அல்லது 12-ம் வீட்டில் இருந்தாலும் கண்பார்வையில் தொந்தரவு இருக்கும். 2-ம் அதிபதி 8-ல் இருந்து அங்கு சூரியனும் இருந்தால் அரசாங்கத்தின் மூலமாகப் பண விரயம் இருக்கும். கிரகங்கள் 2-ம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
சூரியன் : 2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.
சந்திரன் : பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். சந்திரன் பெண்கிரகம் அல்லவா? பணவரவு ஒரே மாதிரியாக இருக்காது. உயர்வும், தாழ்வும் இருந்து வரும்.
செவ்வாய் : இவர்கள் சண்டைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் பேச்சுத் திறமை இருக்கும்.
புதன் : ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு; ஏனெனில் புத ஒரு இரட்டைக் கிரகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 16 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருக்கும், வீட்டு, வீட்டில், வீடு, அல்லது, அதிபர், ஜோதிடப், எனக், இருந்தால், பணம், அல்லவா, மூலமாகப், இருப்பது, ஜோதிடம், பணவரவு, ஜோதிடர், ஒருவர், பாடம், கொள்வோம், நீங்களும், ஆகலாம், ஏனெனில், செய்யும், முதலீடு, முடியும், சம்பாதிப்பர், சூரியன், சந்திரன், நல்ல, கிரகங்கள், மூலமாகவோ, இருந்து, சூரியனும், கூறலாம், அதிபதி, இருந்தாலும், வேலைக்குப், வியாபாரம், பாடங்கள், கிடைக்கும், வரும், கொள்ளலாம், அல்ல, நல்லது, அவ்வளவு, அங்கு