ஜோதிடப் பாடம் – 15 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும் இலக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும். ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும். செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.
ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் இலக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள் சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இலக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம். சூரியனோ அல்லது இலக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். இலக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.
பொதுவாக நல்ல கிரகங்கள் இலக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. நாம் இத்துடன் முதல் இலக்கின பாவத்தை முடித்துக் கொள்வோம். இனி 2-ம் பாவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 15 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருந்தால், இருக்கும், சேர்ந்து, நல்ல, சந்திரனும், இருப்பர், அல்லது, சூரியன், இலக்கினத்தில், கொடுப்பார், ஜோதிடப், உடல், இருப்பாரேயாகில், நவாம்சத்திலும், இருப்பது, இருப்பார், சந்திரன், அமைப்பைக், ஜோதிடம், வர்க்கோத்தமம், நல்லது, கொண்டவராக, ஜோதிடர், நீங்களும், ராகுவும், ராசியிலும், கிரகங்கள், உறுவ, ஒருவரின், பாடம், செவ்வாயும், மேஷத்தில், ஆகலாம், சூரியனும், எனப்படும், இருக்கிறார், கொள்வோம், நாம், எண்ணம், பொருளை, அபகரிக்கும், பிறர், தெரிந்து, அவர்களுக்கு, நீண்டு, குரு, அமைப்பு, பற்றிப், பாடங்கள், சனியும், கொள்ள, வேண்டும், சம்மந்தமான, பொதுவாக, சந்திரனுடன், புதன், என்றால், காரகம், இருக்குமேயாகில்