ஜோதிடப் பாடம் – 12 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
நீங்கள் ஜோதிட சம்மந்தமான புத்தகங்கள் படிக்க வேண்டும்என எழுதி இருந்தோம். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கென்று பல புத்தகங்கள் இருக்கின்றன. இதைத் தவிர "ப்ருஹத் ஜாதகம்", "பல தீபிகை" "உத்தர காலாம்ருதம்" போன்ற நூல்கள் பல இருக்கின்றன. இவைகளைப் படிக்க ஆரம்பிக்கலாம். இவைகள் தான் ஜோதிடத்திற்கு அடிப்படை. படிக்கப் படிக்கத்தான் ஜோதிட அறிவு வளரும். முயற்சி செய்யுங்கள்.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. அவற்றின் குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை பலன் சொல்லப் பயன் படும்.
ஆண், பெண் ராசிகள் :
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். ராசிகளை ஆன், பெண் எனப் பிரிப்பதின் அவசியம் தெரிகிறது அல்லவா?
வடக்கு, தெற்கு ராசி
மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப் படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 12 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, எனக், கொள்ளலாம், பெண், ஜோதிடப், ராசிகள், படும், அதிகம், இருக்கும், மீனம், அவருக்கு, மேஷம், உள்ள, ஆகலாம், ஜோதிடர், நீங்களும், பாடம், ", ஜோதிடம், சுபாவம், தங்கள், ராசியில், கிரகங்கள், உள்ளவராகவும், காலங்களில், க்குடையவர், வீடு, தெற்கு, எனவும், வடக்கு, ராசி, எனப், படிக்க, புத்தகங்கள், ஜோதிட, பாடங்கள், இருக்கின்றன, பயன், சிறிது, இருப்பாரேயாகில், பிறந்து, ஆகியவை, இருப்பார்