தனுசு இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

மூலம் பூராடம் உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த தனுர்ராசிக்காரர்கள் ப்ருஹஸ்பதி கிரஹமாகிய குருபகவான் வீட்டில் ஜெனனமாவதால், சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு ஆகிய நல்லொழுக்கங்களைக் கொண்டவர்களாகவும் வளர ஆரம்பிப்பார்கள். தெய்வீக வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள், பெரியவர்களிடம் பக்தி, விசுவாசகங்களுடன் கூடினவர்களாக இருப்பார்கள்.தனக்கு சமமாகவும், உயர் அந்தஸ்து, பதவி, செல்வாக்கு படைத்தவர்களிடம் நட்பைக் கொள்ளுவார்கள்.கீழோரிடம் வெறுப்பைக் கொள்ளுவார்கள். அதிகமாக வெளியே சுற்றும் பழக்கம் இருக்கும்.
தனிர் ராசியில் பிறந்தவர்கள் தங்களது கல்வி, அறிவு திறமைகளால் உயர் பத்வியை அரசாங்கத்தில் பெறுவார்கள். அதிகாரங்களுடனும், அந்தஸ்துடனும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை, வெகு எளிதில் கண்டு கொள்வார்கள்.துர்குணம், கொலை செய்பவர்கள், திருடுபவர்கள் இவர்களை வெகு கலகமாகக் கண்டிபிடிப்பார்கள்.
கிரஹ பலங்களுடன் கூடின தனுர்ராசிக்காரர்கள் அடிமை வாழ்வைப் பெறாமல் 80 ஆண்டுகள் ஆயுள் பாவத்துடன் திடகாத்திர திரேகத்துடன் இருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனுசு இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், குறிப்புகள், ஜோதிடம், இருப்பார்கள், பலன்கள், பிறந்தவர்களுக்குப், தனுசு, இராசியில், உயர், வெகு, கொள்ளுவார்கள், ஆகிய, தனுர்ராசிக்காரர்கள், கல்வி, கொண்டவர்களாகவும்