கன்னி இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

உத்திர நக்ஷத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் சித்திரை 1, 2, பாதங்களில் பிறந்த கன்யா ராசிக்காரர்கள் பிரசித்தி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், தரித்திரத்தையும் வறுமையையும் அனுபவிக்க நேரிடும். தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், ஆசார சீலர்களாகவும், நீதி நேர்மை, பண்புகளுடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள். எக்காரியங்களிலும் எவ்வித தொழிலிலும் அவ்ர்கள் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். சமூக சேவைகள் செய்ய பிரியம் கொண்டவர்களாகவும் தங்களது பிற்காலத்தில் செல்வத்துடனும், செல்வாக்குடனும் சிறப்புடன் விளங்குவார்கள்.ஸ் தானத்ருமங்கள் செய்வதிலும் தன் நிலையையும் மறந்து பிறருக்கு உபகாரங்கள் செய்வதையும் லக்ஷயமாகக் கொண்டிருப்பார்கள்.
கன்யா ராசியில் பிறனஹ்தவர்களை முக்கியமாக தாயாதிகளும், உற்றார் உறவினர் நண்பர்களும் ஏமாற்றி செல்வத்தையும், பொருளையும் அபகரிப்பார்கள். ஆயினும் கன்யாராசிக்காரர்கள் பொறுமை குணங்களிடன், தங்களது மெதுவான சுபாவத்துடனும், அன்பு கலந்த பேச்சுக்களினாலும் எதிர்காலத்தில் சிறப்பைப் பெறுவார்கள்.
சுபக்கிரஹங்கள் பார்வையுடனும், பலத்துடனும் பிறந்த கன்யாராசிக்காரர்கள் சுக செளகர்யங்களுடன் 70 ஆண்டுகாலம் ஜீவித்திருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னி இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், குறிப்புகள், பிறந்தவர்களுக்குப், ஜோதிடம், பலன்கள், இராசியில், கன்னி, கன்யாராசிக்காரர்கள், தங்களது, பிறந்த, கன்யா