உபய ராசியை லக்னமாகப் பிறந்த ஜாதகப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

உபய ராசியில் ஜெனித்த ஜாகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7ம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உண்டாகும். உடல் உபாதையும் நோயும் ஏற்படும். அதே சமயத்தில் மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புண்டு.
இன்னும் சில சிறப்புப் பலன்களை அறியலாம். அதாவது பிரகஸ்பதியான குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய ஸ்தானங்களில் குருவுடன் சூரியன் மற்றும் ராகு அல்லது கேது நிற்க அந்த ஜாதகனுக்கு தோஷம் எதுவும் ஏற்படாது. லக்னாதிபதி ஆட்சி மற்றும் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் பாவக்கிரகங்கள் பார்வை பெற்றால் அவன் வீட்டில் களவு போகும். பண விரயங்கள் ஏற்பட்டு பிறர் கையை நம்பி வாழும் நிலை ஏற்படும். அரசாங்கத்தால் பங்கம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்தால் அவர்களின் உறவும் அறுந்து பிரிவர். பலவகைகளிலும் துன்பங்கள் ஏற்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உபய ராசியை லக்னமாகப் பிறந்த ஜாதகப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஏற்படும், ஜோதிடக், குறிப்புகள், லக்னமாகப், பலன்கள், ஜோதிடம், ஜாதகப், ராசியை, பிறந்த, ஆட்சி, மீனம், தனுசு