சர ராசியை லக்னமாகப் பிறந்த ஜாதகப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்.
சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அவன் தசை காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். இந்த பலன்கள் ஏற்படாமல் செல்வம் போன்ற யோக பலன்களை அளித்தாலும் வியாதிகளை உண்டாக்குவான். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள் அழியலாம். எனினும் லாப ஸ்தானாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களையே தருவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர ராசியை லக்னமாகப் பிறந்த ஜாதகப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், பலன்கள், லக்னமாகப், பிறந்த, குறிப்புகள், ஜோதிடம், ராசியை, ஜாதகப், பெற்ற