துலாம் இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள், சந்திரனும், புதனும், யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபர்கள். அங்காரகன் தோஷம் உடையவன்.
துலாம் லக்னத்தார் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனம் என்றே சொல்லலாம். பெண்களாக இருப்பின் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திப்பர். காரணம் இவர்கள் அழகானவர்கள். அழகாக பேசுவார்கள். பெரும் செலவுகள் தங்களை அலங்கரித்துக்கொள்வதற்காகவே இருக்கும். சுற்றுலா,ஆடம்பரத்தில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் கோபம் வந்தால் எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவார்கள் அவர்களுடன் பழகுவதை முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். தராசு சின்னமே இவர்கள் ஒருவரை பார்த்தவுடன் எளிதில் எடைபோடக்கூடியவர்கள் என்பதால்தான். நுணுக்கமான அறிவு நிறைந்தவர்கள். .உணவு சுவையாக அன்பாக பரிமாற வேண்டும் என்பதில் முக்கியத்துவம் காட்டுவார்கள். ரசனை அதிகம் நிறைந்தவர்கள். இப்படி இருந்தா நல்லாருக்கும் என அழகாக எடுத்து சொல்வார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாகவும்,சட்ட நுணுக்கம் தெரிந்த வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள். நடிகர்களாகவும் கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
துலாம் இலக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், துலாம், ஜோதிடக், குறிப்புகள், தராசு, பலன்கள், ஜோதிடம், பிறந்தவர்களுக்குப், இலக்கினத்தில், இவர்கள், புதனும், அழகாக, நிறைந்தவர்கள், சந்திரனும், இருக்கிறார்கள், இருக்கும், பேசுவார்கள், என்றே, சூரியன், செவ்வாய், குரு