மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்! - ஜோதிடக் குறிப்புகள்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி ரேவதி ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த மீனராசிக்காரர்கள் அழகிய அங்கலக்ஷணங்களுடனும் தோற்றங்களுடனும் இருப்பார்கள்.தான் செய்த காரியங்கள், செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்லமாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். பயந்த சுபாவங்களுடன் இருப்பார்கள்.
மீனராசியில் பிறந்தவர்கள் சுமாரான கல்வி ஞானங்கள் தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் இவைகளை அறிந்திருப்பார்கள்.ஆனால் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்களா என்பது சந்தேகம். வாசனைத்திரவியங்களிலும், ஆடை ஆபரணங்களிலும் பிரியம் இருக்கும்.
மீனராசியில் பிறந்தவர்கள் முன் ஜாக்கிரதையுடன் கூடினவர்களாக இருப்பார்கள். பிறர் பொருளை அப்கரிப்பார்கள். பிறருடைய உதவிகளினாலேயே தங்களது வாழ்க்கையை நடத்துவார்கள். கிரஹபலம் பெற்ற மீனராசிக்காரர்கள் நல்ல செல்வம், செல்வாக்கு சந்தோஷங்களைப் பெற்றிருந்தாலிம் அவர்களுக்கு எதிர்பாராதவிதமான கஷ்டநஷ்டங்கள் உடனேயே ஏற்படும். அனேகமாக சிரம வாழ்க்கையைத்தான் அனுபவிப்பார்கள்.
மீன ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் என்று கூறலாம். சிரமமான வாழ்க்கை வசதிகளுடன் 90 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். புத்திர சந்தானங்கள் நிறைந்து இருப்பார்கள.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்! - ஜோதிடக் குறிப்புகள், ராசியில், குறிப்புகள், ஜோதிடக், இருப்பார்கள், ஜோதிடம், பலன், பிறந்தவர்களுக்கு, பிறந்தவர்கள், மீனராசியில், காரியங்கள், பிறந்த, மீனராசிக்காரர்கள்