மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்! - ஜோதிடக் குறிப்புகள்

உத்திராடம் 2, 3, 4, பாத்ங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2, பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்களாகிய மகர ராசியில் பிறந்தவர்கள், சிவந்த மேனியையும், பெரிய கண்களையும், திரேகத்தில் மச்சங்களையும், நீண்டு உயர்ந்த கம்பீர திரேகக் கட்டையும் பெற்றிருப்பார்கள். கல்வி, கேள்விகளில் பிரகாசத்தையும், ஆசார அனுஷ்டானங்களில் சிறந்தும், தெய்வீக வழிபாடுகளை அறிந்தும், இருப்பார்கள்.வாசனைத் திரவியங்களைல் பிரியமும், ஆடைஆபரணங்களில் ஆசைகளும் அந்தஸ்துக்கு ஏற்ற இடங்களில் ஆகாரம் கொள்வதும் யாரையும் லக்ஷியம் செய்யாமல் தன் இஷ்டம் போலக் காரியங்களைச செய்து வெற்றி பெற்று வாழ்வார்கள்.
மகரராசியில் பிறந்தவர்களில் குடும்பம் செல்வம், செல்வாக்குடன் கீர்த்தி பெற்று இருக்கும். புத்திர சந்தானங்களுக்கு குறைவிருக்காது.மனவியிடம் அதிகமான பிரியத்துடனும், மனைவியின் போக்கின்படி நடந்து கொள்ளும் சுபாவத்தையும் பெற்றிருப்பார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள்.
மகரராசியில் பிறந்தவர்கள் பிறக்கும்போது செல்வந்த குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வயதில் சில சிரமங்களை அனுபவித்து, பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங்கலையும், ஸ்திரசொத்துக்கலையும் பெறுவார்கள்.
கிரஹங்கள் பலத்துடன், பிறக்கும் மகரராசிக்காரர்களுக்கு ஆயுள் பலம் 70 ஆண்டுகளுக்குக் குரைவில்லாமல் இருக்கும.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், ராசியில், குறிப்புகள், பலன், ஜோதிடம், பிறந்தவர்களுக்கு, பெற்று, மகரராசியில், இருப்பார்கள், பெற்றிருப்பார்கள், பிறந்தவர்கள், பெரிய