மேஷ இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

மேஷ ராசியில் பிறந்தவர் களின் பலன்கள் அசுவினை-பரணி-கிருத்திகை 1ம் பாதம் இந்த நக்ஷத்திரங்களில் அதாவது, மேஷராசியில் பிறந்தவர்கள்-பூமி, காணி, நிலபுலங்கள், வீடு, விவசாயத் தொழிலில் மேன்மை, ஆள், அதிகாரங்களுடன் இருப்பார்கள். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவார்கள். அற்ப ஆசைகள் இல்லாதவராகவும், வாக்கு வன்மையும், கோப குணம், முரட்டு சுபாவங்களுடனும், கம்பீரமான தோற்ற்ங்களுடனும், தெய்வீக வழிபடுகள், சாஸ்திர ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பொன் ஆபரணங்களையும், பட்டுப் பீடாம்பரங்களையும், வஸ்திரங்களையும் பெற்றிருப்பார்கள். கல்வியில் திறன் பெற்றிருப்பார்கள். மெலிவான இளைத்த சரீரத்துடன், நீண்ட கழுத்து, கை கால்களுடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளுடன் திரேக பலத்துடனிருப்பார்கள். மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும், இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி செல்வாக்கு, சுகம் இவைகளைப் பெற்றிருப்பார்கள். என்று பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மேஷ இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், குறிப்புகள், பலன்கள், பெற்றிருப்பார்கள், இருப்பார்கள், ஜோதிடம், இராசியில், பிறந்தவர்களுக்குப், ராசி, நீண்ட, பிறந்தவர்கள், ராசியில்