காளிதாஸ் - 1931 வருடம்
படத்தின் பெயர் : | காளிதாஸ் |
நடிகர்கள் : | பி. ஜி. வெங்கடேசன், எல். வி. பிரசாத் |
நடிகையர்கள் : | டி. பி. ராஜலட்சுமி, தேவாரம் ராஜாம்பாள், ஜே.சுசீலா, சுசீலா தேவி, எம்.எஸ்.சந்தான லட்சுமி |
இசை : | - |
பாடல்கள் : | மதுரகவி பாஸ்கரதாஸ் |
பின்னனி பாடகர்கள் : | - |
ஒளிப்பதிவு : | - |
படத்தொகுப்பு : | - |
கலை : | - |
இயக்கம் : | எச். எம். ரெட்டி |
தயாரிப்பு : | அர்தேஷார் இரானி |
வெளியான தேதி : | அக்டோபர் 31, 1931 |
பட நீளம் : | 6000 அடி |
கதைச் சுருக்கம் :
உஜ்ஜயினியில் வாழ்ந்த கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை. தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸுக்கு மணம் செய்துவைத்துவிடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான்.
பி.ஜி. வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலட்சுமி இளவரசியாகவும் தோன்றினார். எல். வி. பிரசாத் கோவில் பூசாரியாக நடித்தார். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலட்சுமி தமிழிலும், எல்.வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள்.
குறிப்பு :
இது தமிழில் முதல் பேசும் படம். இத் திரைப்படத்திற்கு "விடாபோன்" முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘கினிமா சென்டிரல்’ (தற்போதய ஸ்ரீ முருகன்) (35 எம் எம்) என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காளிதாஸ் - 1931 வருடம், காளிதாஸ், பிரசாத், ராஜலட்சுமி, வெங்கடேசன், வருடம், அவரை, மணம், மந்திரி, சுசீலா, cinema, திரைப்படங்கள், தமிழ்த், கலைகள்