உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள்
உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன்
உடுமலை முத்துசாமிக் கவிராயர் சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய மற்றொரு நாடகாசிரியர். இவர் சுவாமிகளைவிட நான்கு வயது மூத்தவர்.
கவிராயர் உடுமலைப்பேட்டையில் 1863 செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் திரு. அங்கப்ப செட்டியார். இருபத்தி நாலு மனை தெலுங்கு தேசாதிபதிகள் என அழைக்கப்படும் வைசிய மரபிலே தோன்றியவர் இவர்.
முத்துசாமியின் தாய்மொழி தெலுங்கு. 14ஆவது வயதிலேயே தமிழிலும், தெலுங்கிலும் கவி பாடும் புலமை இவருக்கு ஏற்பட்டது. முத்துசாமியின் இசைத் திறமையையும் நினைவாற்றலையும்,பாடல் புனையும் சக்தியையும் கண்ட பெரியோர்கள் முத்து சாமி பிற்காலத்தில் பெரும்புகழோடு விளங்குவான்' என்று கூறினார்கள்.
முத்துசாமிக்கவிராயர் |
முத்தமிழ் சக்கரவர்த்தி எனப் பெரும் புகழ்பெற்ற மாம்பழக் கவிச் சிங்க நாவலர் அவர்களிடம் நமது முத்துசாமி இளமையில் மாணவராக இருந்தார். அப்போது இவரது புலமை மேலும் பொலிவு பெற்று விளங்கியது. தமது ஆசானாகிய மாம்பழக் கவிச் சிங்க நாவலரின் மேல் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார்.
'மெச்சுஞ் சிலேடை தனிற்காள
மேகம் சமுத்ர விலாசமென்பார்
தச்சுஞ் கிடந்து சுவைபருகச்
சந்திர விலாசம் பகர்ந்த சிங்கம்
அச் சுந்தரச் செவ்வேன் சிவன்பால்
அடையா திருந்தக் கனியடையப்
பச்சென்றிலங்கும் பொழிற்பழநிப்
பதியிலுதித்த மாம்பழமே...'
இப்பாடல் அவர் பாடலில் ஒன்றாகும்.
இருபதாம் வயதில் முத்துசாமி உடுமலைக் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மாதம் பத்துரூபாய் சம்பளத்துக்கு மகிமை கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் குன்னத்தூரிலே அம்மை குத்தும் இன்ஸ்பெக்டராக சில காலம் பணிபுரிந்தார். 26-ஆம் வயதில் மதுரைத் தமிழ் சங்க பரீட்சைக்குப் போயிருந்தார். அப்போது இவரது புலமையை அறிந்த டாக்டர் உ. வே. சுவாமிநாதைய்யர் அவர்கள் "தாங்கள் தேர்வுக்கு வரவேண்டிய புலவரல்லவே" என்று கூடினாராம். ஐயர் அவர்களின் மூலம் அப்போது தமிழ்ச் சங்கத்தின் தலைவாகவிருந்த பாண்டித்துரைத் தேவர் அவர்களின் பேராதரவு முத்துசாமிக் கவிராயருக்குக் கிடைத்தது.
27-ஆம் வயதில் புலவரேறு தண்டபாணி சுவாமிகள் என்னும் முருகதாச சுவாமிகளிடம் சந்த இலக்கணம் பயின்றார் கவிராயர். அப்போதுதான் சங்கரதாஸ் சுவாமிகளுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
ஈரோடு மகாஜன உயர்நிலைப்பள்ளி, தாராபுரம் லோகல் பண்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள உயர் நிலைப் பள்ளிகளிலெல்லாம் இவர் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்.
பள்ளி விடுமுறை நாட்களில் இவர் வேடிக்கையாக நாடகங்கள் எழுதத் தொடங்கினார். தம் பள்ளி மாணவரைப் பயிற்றுவிப்பதும், அரங்க மேடையில் நடிக்க வைப்பதுமாக இவர் நாடகத்துறையில் ஆர்வம் காட்டினார். அதன் காரணமாகவே கவிராயர் பிற்காலத்தில் நாடகத்துறையில் அதிகமாக ஈடுபட நேர்ந்தது. இவரது நாடகப் புலமையைப் பயன்படுத்திக்கொண்ட முதல் நாடகசபை தஞ்சை ஜகன் மோகன நாடகக் குழு எனச்சொல்லப்படுகிறது. அக்குழுவின் உரிமையாளர் பிரபல பெண் நடிகராக விளங்கிய சுந்தராவ் அவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடுமலை முத்துசாமிக்கவிராயர் - நடிகன் - நாடகக் கலைக் கட்டுரைகள், இவர், உடுமலை, முத்துசாமிக்கவிராயர், கவிராயர், நாடகக், நடிகன், வயதில், அப்போது, இவரது, தமிழ், முத்துசாமி, தெலுங்கு, கட்டுரைகள், கலைக், கவிச், மாம்பழக், ஆகிய, drama, சிங்க, நாடகத்துறையில், உயர்நிலைப்பள்ளி, அவர்களின், arts, பள்ளி, மெட்ரிகுலேஷன், மாதம், சங்கரதாஸ், விளங்கிய, பெற்று, முத்துசாமிக், முத்துசாமியின், கலைகள், பிற்காலத்தில், ஏற்பட்டது, புலமை, சுவாமிகள்