தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் நாடகக் கலை
ஆடல், பாடல், உரையாடல், அபிநயம், இசை என பல கலைகளின் கூட்டுப் படைப்பாக விளங்கி, கண்ணுக்கும் செவிக்கும் சிந்தனைக்கும் ஒருசேர விருந்தளிக்கும் உயரியகலை நாடகம். இக்கலை நம் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைந்து, நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி நம் உணர்வை வளர்க்கிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தமிழில் தமிழ்நாட்டில் நிலவிவரும் நாடகக் கலையைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
தமிழை இயல், இசை, நாடகம் என மூவகையாகப் பகுத்து முத்தமிழ் எனக் கொண்டனர் பண்டைத் தமிழ்ப்புலவர்கள். பழங்காலத்தில் நாடகங்களை எப்படி நடத்தினர், எப்படி வரவேற்றனர், எப்படி நாடகக்கலை நிலவி வந்தது என்பது பற்றியும், சங்ககால நாடக்கலை, சங்க மருவிய கால நாடகக்கலை, கி.பி. 300க்குப் பின்னர் நாடகக்கலை, சோழர் காலத்தில் நாடகக்கலை (கி.பி.900-1300), சோழர்களுக்குப் பின் நாடகக்கலை, நாட்டுப்புற நாடகம் (கி.பி. 1700-1900) பற்றி இக்கட்டுரையில் பழங்கால நாடகக்கலை குறித்து கூறப்பட்டுள்ளது.
டி.கே.எஸ்.சகோதரர்கள் |
தற்கால நாடகங்கள், நவீன நாடகங்கள் பற்றியும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த, செயல்பட்டு வருகிற நவீன நாடகர்களான கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமி, சே.இராமானுஜம் இந்திரா பார்த்தசாரதி, நிஜநாடக இயக்க மு.இராமஸ்வாமி, பரீக்ஷா ஞாநி, சென்னைக் கலைக்குழு பிரளயன், நந்தன் கதை ர.ராசு, கருஞ்சுழி ஆறுமுகம், எஸ்.முருகபூபதி, வேலுசரவணன், கே.ஏ.குணசேகரன், நிஜந்தன், கோமல் சுவாமிநாதன், அ.ராமசாமி போன்றோர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்தமிழ்:
இயல், இசை, நாடகம் என்று தமிழ் மூவகைப்படும். "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" (பொருளதி.53) என்கிறது தொல்காப்பியம்.
"நாடக மகளிராடுகளத் தெடுத்த
வீசிவீங் கின்னியங் கடுப்ப" - (பெரும்பாணாற்றுப்படை)
"பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்" - (பட்டினப்பாலை)
"நாடக மேத்தும் நாடகக் கணிகை" - (சிலப்பதிகாரம்)
"நடமே நாடகம் கண்ணுள் நட்டம்
படிதம் ஆடல் தாண்டவம் பரதம்
ஆறுதல் தூங்கல் வாணி குரவை
நிலையம் நிருத்தம் கூத்தெனப் படுமே" - (திவாகர நிகண்டு)
நாடகத்தைக் கூத்து, அதாவது நாட்டியமெனவே கொண்டு நாடகத் தமிழானது நாட்டியத்திற்குரிய இலக்கண இலக்கியங்களாக விளங்கி, நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வந்ததை மேற்கண்ட கூற்றுகளிலிருந்து அறியலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகக்கலை, நாடகம், தமிழ், நாடகக், பற்றி, பற்றியும், நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, கலைக், எப்படி, செயல்பட்டு, வழக்கினும், நவீன, முதலியார், விளங்கி, கலைகள், arts, drama, ஆடல், பாடல், இயல், இக்கட்டுரையில், முத்தமிழ்