சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் - நாடகக் கலைக் கட்டுரைகள்
கோவிலுக்குச் செல்லுகின்றவர்கள் அங்கிருக்கும் சிலைகளை வணங்குகிறார்களென்றால், சிலைகளின் அழகைப் பார்த்தோ, அவைகளின் அங்க அமைப்புகளைப் பார்த்தோ அல்ல. அந்தச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கின்ற வரலாறுகள் அந்தச் சிலையின் மூலம் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் இவற்றை எண்ணித்தான் நம்பிக்கையோடு அவன் வணக்கம் செலுத்துகிறான். அதுபோல, பாவலர் அவர்களுடைய திரு உருவம் வெறும் படத்திலேயிருந்தாலும் நாம் மதிப்புக் கொடுப்பதும் - வணக்கம் செலுத்துவதும் அவருடைய கருத்துக்கும் உழைப்புக்கும் - அறிவுக்கும் ஆற்றலுக்குமே என்பதை உணர வேண்டும்.
தேசிய வரலாற்றை உருவாக்கியவர்
நான் 'தேசிங்கு ராஜன்' என்ற படத்திலே நடித்தேன். அந்தக் கதைக்கு ஆதாரமாக இருந்தது பாவலர் அவர்கள் எழுதி பள்ளியிலே அன்று பாடமாக வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நாடக நூலாகும். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத சிலர் முஸ்லிம்களை இழிவு படுத்திவிட்டதாகவும், தக்க ஆதாரமில்லாமல் தவறு செய்து விட்டதாகவும் புகார் கிளப்பினார்கள். அவ்வாறு இழிவு படுத்தும் ஒரு நூலை, பள்ளியிலே பாடமாக வைக்க முடியுமா? என்பதை நினைத்துப் பார்க்கும்படியாக வேண்டுகிறேன்.
இந்த உண்மைகளையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நாடகக்காரர்கள் வெறும் கூத்தாடிகள் அல்லர்; சமுதாயத்தால் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதையும் தேசிய வரலாற்றை உருவாக்கிய நாட்டுப்பற்றுடைய பெருங்கலைஞர்கள் என்பதையும், நாம் எண்ணி-எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்.
நாடகக் கலைஞர்கள்-தொழிலாளர்கள்-நெசவாளர்கள்-விவசாயிகள்-எழுத்தாளர்கள் எல்லோரும் நல் உணர்ச்சியோடு பாடுபடுவார்களானால்-நாட்டின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்பார்களானால், நாடும் உயரும்,-நாமும் உயருவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் - நாடகக் கலைக் கட்டுரைகள், பாவலர், நாடகக், சதாவதானம், கட்டுரைகள், கலைக், கிருஷ்ணசாமிப், பள்ளியிலே, வரலாற்றை, பாடமாக, எண்ணி, தேசிய, என்பதையும், இழிவு, வைக்க, வணக்கம், கலைகள், arts, drama, பார்த்தோ, அந்தச், நாம், வெறும், என்பதை