சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் - நாடகக் கலைக் கட்டுரைகள்
சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
- மக்கள் திலகம்.எம்.ஜி.ராமச்சந்திரன்
காலஞ் சென்ற நாடக ஆசிரியர் சதாவதானம் திரு. தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்களை நான் நன்கு அறிந்தவன். அவருடைய திறமையை நேரிலே கண்டு அனுபவிக்கும் பேற்றினைப் பெற்றவன். அவர் எழுதித் தந்த நாடகங்களிலே நடித்தவன். அதிலும், நாட்டிலே சுதந்திர
உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அடியை வாங்கிக் கொண்டு - உதையை வாங்கிக் கொண்டு - தியாகம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அந்த மக்களுக்கு உணர்ச்சியூட்டி நாட்டிற்கு நல்லதைச் சொல்லி, தேசிய எழுச்சியைத் தூண்டிவிட்டு, தடியடியானாலும் சரி - துப்பாக்கி குண்டுகளானாலும் சரி - சிறை செல்வதானாலும் சரி - ஏற்றுக்கொள்ளத் தயார் என்று துணிந்து முன் வந்த ஒரு சிறந்த நாடகப் பேராசிரியர் கிருஷ்ணசாமி பாவலர் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
பாவலர் அவர்கள் தம்முடைய திறமையை தமக்குச் சொத்து சேர்ப்பதற்காகப் பய்னபடுத்திக் கொண்டவரல்லர். தம்முடைய உள்ளத்திலே எழுகின்ற சுதந்திர உணர்ச்சி, நாட்டு மக்களிடையே ஏற்படவேண்டுமென்று விரும்பினார். சமூகத்திலே மாற்றம் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவருடைய நாடகங்களின் பெயர்களைச் சொன்னாலே, அவர் ஏப்படிப்பட்ட நாடகங்களை அமைத்தார் என்பதை, நாம் உணர முடியும்.
கிருஷ்ணசாமிப் பாவலர் |
நான் முதன் முதலாகக் கலந்து கொண்டு நடித்த அவருடைய நாடகத்தின் பெயர் 'பதிபக்தி'. மதுவினால் குடித்துக் கெட்டுபோன ஒரு பெரிய பணக்காரனுடைய வாழ்க்கையைச் சித்தரித்து, அதனால் அவனுடைய குடும்பம் பாழாகும் நிலையை எடுத்துக் காட்டி மக்களைத் திருத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நல்ல நாடகம் அது. அந்த நாடகத்தைத் தயாரிப்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியையும், உழைப்பையும் நான் நேரிலே கண்டு உணர்ந்தவன். நாடகத்தை எழுதுகின்றவர் ஓர் உயர்ந்த நடிகராகவும் விளங்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நல்ல நாடகத்தை உருவாகக் முடியும். திரு. பாவலர் அவர்கள் சென்னை சுகுண விலாச சபையில், பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களோடு வேடந்தாங்கி நடித்தும் பழகியவர் என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் அவர் நல்ல நாடகங்களை உருவாக்க முடிந்தது. மேடையிலே நடிக்கும் வாய்ப்பினை பெறாமல் இருப்பவர்கள் கூட, நல்ல நடிப்புணர்ச்சி உடையவராக இருந்தால் மட்டுந்தான் அவர் நல்ல நாடக ஆசிரியராக விளங்க முடியும் என்பதை வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
கதாநாயகன் செல்வதை இழந்து, தன்னுடைய உயர்ந்த வாழ்க்கையை இழந்து, தீய நண்பர்களின் கூட்டுறவினால், உடல் நலத்தை இழந்து துன்பப்படுகிறான் என்ற ஒரு காட்சியை அமைக்க வேண்டுமென்றால், அந்த நிலையைத் தம் உள்ளத்திலே கற்பனை செய்து பார்த்து, இப்படித்தான் அந்தப் பாத்திரம் வேதனைப்படுவான் என்பதை மனக்கண்ணால் உணர்ந்து - உருவகப்படுத்தி தம்முடைய எழுத்துத் திறமையால் - அறிவுத் திறமையால் - அதற்குரிய வார்த்தைகளை அமைக்கும் சக்தியைப் பெற வேண்டுமென்றால், நிச்சயமாக அந்த ஆசிரியர் ஒரு சிறந்த நடிப்புணர்ச்சி உடையவராக இருந்துதான் தீரவேண்டும். அந்த ஆற்றலை முழுக்க - முழுக்க அடைந்த ஒருவர் நமது மதிப்பிற்குரிய கிருஷ்ணசாமிப் பாவலர் அவர்களே.
பிரசார நாடகமென்பது அவமானப்படுத்துவதல்ல
அவர் அடுத்த படியாக எழுதித் தந்த நாடகம் 'கதர் பக்தி'. அந்த நாளில் விதேசித் துணிகளை எரிப்பதற்கும் விதேசித் துணிகளை அணிவதே கேவலம் என்ற நிலைமை நாட்டிலே உண்டாயிருந்தது. அன்னிய நாட்டுத் துணியை உடுத்துகிறவன் 'தேசிய விரோதி' என்று மக்கள் கருதுகின்ற அளவுக்கு நாட்டிலே தேசிய உணர்ச்சியை ஊட்டிய நாடகம் அது! தேசம் மகாத்மா காந்தியடிகளின் வழியிலே சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் நல்ல ஜரிகை வேட்டிகளை - பட்டுத் துணிகளை - உடுத்தியவர்கள் அப்படியே மேடைக்கு வந்து, 'எனக்கு ஒரு கதர் வேஷ்டி தாருங்கள். இந்த அந்நிய ஆடையைக் கொளுத்தி விடுகிறேன்' என்று þடையிலேயே கொளுத்துகிற அளவுக்கு உணர்ச்சியைத் தூண்டிவிட்ட நாடகம் 'கதர் பக்தி'. அந்த நாடகத்தில் அவர் கதரைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. வாழ்க்கையில் தவறிப்போன பெண்கள், ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதப்பட்ட அந்த நேரத்தில், தவறிப்போன ஒரு பெண் தன்னுடைய நிலையை உணர்ந்து, தன் வாழ்க்கையைத் திருத்திக்கொண்டு, தேச சேவகியாகிப் பாடுபடவும் முன்வரக்கூடிய ஒரு பாத்திரமாகவும் அமைய முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, ஓர் உயர்ந்த பாத்திரத்தை அந்த நாடகத்திலே அவர் அறிமுகப் படுத்தியிருந்தார். வாழ்க்கையில் தவறிய பெண்ணும், நல்லவளாக. சமூகத்தால் மதிக்கப்படும் அளவுக்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என்ற உண்மையை அந்த நாடகத்தின் மூலம் எடுத்துக் காட்டினார்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் - நாடகக் கலைக் கட்டுரைகள், அந்த, பாவலர், அவர், நாடகம், நல்ல, கிருஷ்ணசாமிப், முடியும், என்பதை, சதாவதானம், நேரத்தில், தம்முடைய, கலைக், தேசிய, கொண்டு, கொண்டிருந்த, நடிப்புணர்ச்சி, எடுத்துக், கதர், துணிகளை, இழந்து, உயர்ந்த, நாடகக், நாட்டிலே, கட்டுரைகள், நான், அவருடைய, ஆசிரியர், தன்னுடைய, கிருஷ்ணசாமி, உடையவராக, விளங்க, திரு, வேண்டுமென்றால், நாடகத்தை, திறமையால், அளவுக்கு, வாழ்க்கையில், தவறிப்போன, மக்கள், விதேசித், முழுக்க, நாடக, பக்தி, உணர்ந்து, நிலையை, செய்து, drama, கண்டு, arts, வாங்கிக், உணர்ச்சி, தந்த, எழுதித், சிறந்த, பேராசிரியர், திறமையை, வேண்டும், நாடகத்தின், நாடகங்களை, உள்ளத்திலே, கலைகள், நேரிலே, சுதந்திர