25. பூரட்டாதி - நட்சத்திர ஆருடம்

25. பூரட்டாதி வந்ததால்..
|
தழைக்கவே பூரட்டாதி உதயமானால் தப்பாதுன் வாக்குதான் செல்வமோங்கும் இழைக்கவே உனக்கிடர் விளைத்த பேர்கள் இழிவான நோய் நொடியில் மாள்வாரப்பா குழைக்கவே பொன் பொருளும் குவிய வாழ்வாய் கொண்ட தொரு பெண்ணாலே குலந்தழைக்கும் பிழைக்கவே நீடுழிகாலம் வாழ்வாய் பதினேழு நாள் போக பலிதமாமே! |
பொருள்: பூரட்டாதி உதயமானதால், உங்கள் புகழானது ஓங்கும். நாணயம் தவறாத சொல்லுறுதி உண்டாகும். செல்வம் ஓங்கும். உங்களுக்கு இதுவரையிலும் இடைஞ்சல் புரிந்த ஈனர்கள் ஒழிவார்கள். தன-தான்யக் குவியலும், பொன் பூஷண சேர்க்கையும் உண்டாகும். கொண்ட குணவதியினால் குடும்பம் தழைத்தோங்கும். கெடுதலான கண்டங்களும் நீங்கி, ஆயுள் பலத்தைக் கொடுக்கும். எண்ணங்கள் பலவிதமாகும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
25. பூரட்டாதி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

