16. விசாகம் - நட்சத்திர ஆருடம்

16. விசாகம் வந்ததால்..
|
காணவே விசாகமது உதயமானால் கவலையே குடிகொண்ட மனமதாகும் வேணவே மனக்கவலை அதிகரிக்கும் வேதனையும் வாதனையும் முன்னே நிற்கும் பூணவே பொன் பொருளு மழிந்து போகும் பொல்லாத கலகத்தால் பெயர் கெடுக்கும் தோணவே கவலையினால் நோய்தான் காணும் தீதேழு வாரம் வரை தெரிகுவாயே. |
பொருள்: நீ கொண்ட எண்ணம் அபலமாகும். மனத்தில் கவலை குடிகொண்டு, பைத்தியம் பிடித்தவனாகத் திரியச்செய்யும். நாளுக்கு நாள் மனக் கவலை அதிகரிக்கும். பேய்- பிசாசுகளின் தொல்லைகள் ஏற்படும். நோயின் வாதனையும், மனவேதனையும் உண்டாகும். பொன்- பூஷணங்கள் அழியும். பலபேரின் கலகத்தால் உனக்கு துஷ்டன் என்ற கெட்ட பெயர் உண்டாகும். 7-வது வாரத்தில் இடர்கள் நீங்கி, சுகம் உண்டாகும். மத்திம பலனே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
16. விசாகம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

