14. சித்திரை - நட்சத்திர ஆருடம்

14. சித்திரை வந்ததால்..
|
துன்பத்தின் மேல் துன்பமதிகரிக்கும் தொகுத்தோர் சித்திரையு முதயமானால் அன்புடைய அரசர்களின் பகையுண்டாகும் ஆதரித்த பேர்களுனை அவமதிப்பார் கன்றுடனே மாடுமனை நஷ்டமாகும் கடன் கொடுத்து கேட்டாலே கபடம் நேரும் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய்தால் ஒழியுமப்பா நாளுக்கு நாள் பீடைதானே |
பொருள்: துன்பத்துக்கு மேல் துன்பம் அதிகரிக்கும். அரசாங்க விரோதம் உண்டாகும். நீ ஆதரித்து வளர்ந்த நபர்களும் உன்னை அவமதிப்பார்கள். மாடு- கன்று நஷ்டம் ஏற்படும். மனை கொள்வதற்கு விருத்தி இராது. கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால், உன்னைக் கெடுக்கவே நினைப்பார்கள். ஆனால், இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு, நவகோண கர்த்தர்களாகிய நவகிரகங்களைப் பூசிக்க, நன்மை உண்டாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
14. சித்திரை - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

