13. அஸ்தம் - நட்சத்திர ஆருடம்

13. அஸ்தம் வந்ததால்..
|
பலிதமில்லை அஸ்தமது உதயமானால் பலவிதத்தில் நிபந்தனைகள் நேருமப்பா வலிசண்டை வம்புகளும் வந்தே தீரும் வழக்காடினாலுமது தோற்குமப்பா நலி காட்டும் குடும்பத்தில் கலகமாகும் நஷ்டமப்பா தொழில் முறைதான் நிந்தையுண்டாம் தெளிவாகும் இருமாதம் சென்ற பின்னே தீருமப்பா உந்தனுட துன்பந்தானே |
பொருள்: அஸ்தம் உதயமானதால் உலகில் பலவித நிந்தை உண்டாகும். வலிய வரும் சண்டையும், வம்பு- வழக்குகளும் நேரும். விவாதம் செய்தாலும் தோல்வியில் முடிவடையும். நோயும், குடும்பத்தில் கலகமும் உண்டாகும். தொழிலில் நஷ்டமும் நிந்தையும் ஏற்படும். ஆனால், இரண்டு மாதங்கள் கழிந்ததும், துன்பங்கள் ஒழிந்து நன்மை உண்டாகும். மத்திமமான பலன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
13. அஸ்தம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

