7. புனர்பூசம் - நட்சத்திர ஆருடம்

7. புனர்பூசம் வந்ததால்..
|
அப்பனே புனர்பூசம் உதித்தாலே ஆபத்தும் கொடியபிணி கெண்டம் நீங்கும் தப்பி தங்களணுகாது மனைத்தழைக்கும் தனலாபம் மாடுமலை கொள்ளலாகும் செப்பவே சேனநாள் வழக்கு நீரும் சேய்பிறக்கும் கடன் தீரும் தொழிலுமோங்கும் ஒப்பிலா பெரியோர்களுதவியாலே உறுதியுண்டு சிலநாளை கழித்திடாயே. |
பொருள்: புனர்பூசம் ஆருடமானதால் படுமோசமான ஆபத்துகளும், பொல்லாத கண்டங்களும், பாதிக்கும் நோயும் நீங்கும். குறைவின்றி உனது குடும்பம் தழைக்கும். மாடு- மனை வகையில் லாபம் உண்டாம். வழக்குகளில் வெற்றி, புத்திர சம்பத்து, தொழில் விருத்தி உண்டு. அந்நியரான பெரியவர் ஒருவரின் உதவியால் ஆறுதலும் அமோக ஒத்துழைப்பும் உண்டாகும். ஆனால், ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்துவர, கஷ்டங்கள் விலகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7. புனர்பூசம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

