4. ரோகிணி - நட்சத்திர ஆருடம்

4. ரோகிணி வந்ததால்..
|
தானாரும் ரோகிணி உதயமானால் தழைத்திடவே பஞ்சமத்தில் குருவமர்ந்தார் வீணாக வந்த இன்பம் விலகி நிற்கும் வெகுநாளாய் பகையானோ ருறவேயாவார் காணாமல் போன பொருள் வந்து சேரும் கவலைதரும் நோய்விலகும் மகப்பேராகும் கோணாமல் மனைவிமக்களுடனே வாழ்வாய் குறைதீரும் நவக்கிரகத்தை துதித்திடாயே. |
பொருள்: குரு பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்திருப் பதால், பலவிதத்திலும் நன்மை உண்டாகும். மலைபோல் வந்த துன்பங்களும் பனிபோல் விலகும். பகையாளிகளும் உறவாகச் சேருவார்கள். தொழில் விருத்தியாகும். காணாமற்போன பொருளாயினும் ஜீவனாயினும் கருத்துடன் வந்து சேரும். புத்திர பாக்கியம் உண்டு. பந்துக்களுடனும், மனைவி- மக்களுடனும் செல்வாக்குடன் வாழ்வீர்கள். கவலையும் நோயும் கஷ்டமும் இன்னும் இரண்டு வாரங்களில் நீங்கும். நாடிய எண்ணம் நல்லவிதமாக முடியும்; உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. ரோகிணி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

