2. பரணி - நட்சத்திர ஆருடம்

2. பரணி வந்ததால்..
|
கண்டிடுவாய் பரணியது உதயமாச்சு கவலையது குடும்பத்தில் அதிகமாச்சு பெண்டிரும் பிள்ளைகளும் பகையேயாச்சு பேசினால் உன் வாக்கு விஷம் போலாச்சு உண்டான சினேகிதரால் விரோதமாச்சு உதவியதை செய்தாலும் அதர்மமாச்சு கொண்டாடும் குலதெய்வம் துணையும் போச்சு. கொடுமையெல்லாம் வாரமெட்டில் தீரும்பாரே. |
பொருள்: பரணி ஆருடமாக வந்ததால், பலவிதத்தில் உனது கவலை அதிகரிக்கும். மனைவி, மக்களும்கூட பகையாவார்கள். சினேகிதர்களால் கெடுதல் உண்டாகும். உபகாரம் செய்தாலும் அபகாரம் உண்டாகும். உன் வாக்கு மற்றவர்களுக்கு விஷம் போல் தெரியும். தெய்வப் பலனும் தற்போது விலகி நிற்கும். 8 வாரங்கள் கழிந்ததும் இடையூறுகள் எல்லாம் விலகும். மத்திமப் பலன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. பரணி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

