பாடல் 911 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - தர்பாரி கானடா
தாளம் - ஆதி
தானன தனத்த தானன தனத்த தானன தனத்த ...... தனதான |
தாமரையின் மட்டு வாசமல ரொத்த தாளிணை நினைப்பி ...... லடியேனைத் தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப தாருவென மெத்தி ...... யவிராலி மாமலையி னிற்ப நீகருதி யுற்று வாவென அழைத்தென் ...... மனதாசை மாசினை யறுத்து ஞானமு தளித்த வாரமினி நித்த ...... மறவேனே காமனை யெரித்த தீநயன நெற்றி காதிய சுவர்க்க ...... நதிவேணி கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட காதுடைய அப்பர் ...... குருநாதா சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க சோலைபுடை சுற்று ...... வயலூரா சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து சூர்தலை துணித்த ...... பெருமாளே. |
* இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு - முதல் நான்கு அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 911 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்த, முருகன், வயலூர், பெருமாளே, விடுத்து, உள்ள