பாடல் 806 - திருமாகாளம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன ...... தனதான |
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல கோலாக லாரமுலை மார்புதைய பூணகல காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர் சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே பாதாள சேடனுட லாயிரப ணாமகுட மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல் பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன் மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே. |
* திருமாகாளம் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 806 - திருமாகாளம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, மேல், தானான, உள்ள, மயக்கம், உடல், செலுத்தின, போல், மருகோனே, ஆகாச, போலச், பெருமாளே