பாடல் 795 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் - ரேவதி
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனதன தத்தனத் தனனதன தத்தனத் தனனதன தத்தனத் ...... தனதான |
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப் பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும் உடலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக் குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன் உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித் துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக் கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க் குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் தடலனுச வித்தகத் ...... துறையோனே தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத் தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 795 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, தத்தனத், தந்தை, கணபதியின், கூடிய, முத்தியைத், தகிட, பெருமாளே