பாடல் 676 - திருவாலங்காடு - திருப்புகழ்

ராகம் - :
தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான |
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில் முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே. |
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.
** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 676 - திருவாலங்காடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, சூட்டி, தானந், தாத்த, தனதன, பெருமாளே, சூரன், உனது, தாண்டவம், கூத்தர், முன்பு, கேட்டு, கூட்டி, தூதன், மாமன், பாட்டி, தீட்டி