பாடல் 449 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -
கரஹரப்ரியா ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா |
கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே. |
பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் செய்யும் எனது குருநாதராகிய கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான். பொன்னிறத்து பிரமன் அபயம் என்று உன்னைச் சரணடைய, தலையில் குட்டிய தாமரை போன்ற கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான். உன்னை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற ஆர்வம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான். பிரமன், முனிவர்கள், தேவர்கள், அருணாசல ஈஸ்வரர், மற்றும் பரிசுத்தமான என் மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான். ஜானகியின் மணவாளன் ஸ்ரீராமனின் மருமகன் என்று நூற்றுக்கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான். அடைக்கலம் அளிக்கும் சிவகாமி, போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள், ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான். இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன் அன்பு விரிந்த காதல் கொண்ட பெருமாள் நீதான். ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற (தேவயானையாம்) அறிவு நிறைந்த பெண்ணுடன் தகுதிபெற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 449 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாள்காண், நீதான், பெருமாள், தனதனன, ஜோதிப், உள்ள, பிரமன், செய்யும், மேவு, சோதிப், பெருமாளே, சிதம்பரத்தில், நிறைந்த