பாடல் 391 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - ......
தனதன தனனா தனதன தனனா தனதன தனனா ...... தனதான |
கெஜநடை மடவார் வசமதி லுருகா கிலெசம துறுபாழ் ...... வினையாலே கெதிபெற நினையா துதிதனை யறியா கெடுசுக மதிலாழ் ...... மதியாலே தசையது மருவீ வசையுட லுடனே தரணியில் மிகவே ...... யுலைவேனோ சததள மலர்வார் புணைநின கழலார் தருநிழல் புகவே ...... தருவாயே திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய் திருநெடு கருமால் ...... மருகோனே திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார் திரிபுரை யருள்சீர் ...... முருகோனே நிசிசர ருறைமா கிரியிரு பிளவா நிறையயில் முடுகா ...... விடுவோனே நிலமிசை புகழார் தலமெனு மருணா நெடுமதில் வடசார் ...... பெருமாளே. |
(பெண்) யானையின் நடையைக் கொண்ட பொது மகளிருக்கு மனம் வசப்பட்டு, வருத்தம் தருகின்ற பாழான வினைப் பயனால், நல்ல கதியை அடைவதற்கு நினையாமலும், உன்னைத் துதிப்பதை அறியாமலும், அழிவைத் தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற புத்தியினால், சதையைக் கொண்டதும், பழிப்புக்கு இடமானதுமான உடலுடன் பூமியில் மிகவும் அலைவேனோ? நூறு இதழ்களை உடைய தாமரை போன்றதும், பிறவிக் கடலைத் தாண்டத் தெப்பம் போன்றதுமான உனது திருவடி நிரம்பத் தருகின்ற நிழலில் வந்தடைய அருள்வாயாக. நான்முகனான பிரமனை பெரிய சிறைக்குள் புக வைத்தவனே, அழகிய பெரிய கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, திரிபுரங்களையும் நெருப்பிட்டு அழித்த சிவபெருமானுடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் திரிபுரையாகிய பார்வதி ஈன்ற சிறப்பான குழந்தையே, அசுரர்கள் இருந்த பெரிய கிரெளஞ்ச மலை இரண்டு பிளவாகும்படி வீரம் நிறைந்த வேலை வேகத்துடன் செலுத்தியவனே, பூமியில் புகழ் நிறைந்த தலம் என்னும் பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடப் புறத்தே வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 391 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெரிய, தனனா, தனதன, நிறைந்த, பூமியில், கொண்ட, பெருமாளே, தருகின்ற