பாடல் 30 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - மோகனம்;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த ...... தனதான |
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 30 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்த, தந்த, தனதன, பெருமாளே, மனம், மயில், வந்த, கூறி, முன்பு, திரிந்து, பெறுவேனோ, தகிட, செம்பொன்