பாடல் 199 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த தனதனன தனன தந்த ...... தனதான |
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து விழவதன மதிவி ளங்க ...... அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால் இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த இருளகல வுனது தண்டை ...... யணிபாதம் எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய் அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும் பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 199 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்த, மீது, வீற்றிருக்கும், உனது, மேலும், பெருமாளே, முழுகி, கடவுள், கங்கை, அணிந்த