பாடல் 1254 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த ...... தனதான |
தென்றலு மன்றி யின்றலை பொங்கு திண்கட லொன்று ...... மிகமோதச் செந்தழ லென்று வெந்தழல் சிந்து திங்களும் வந்து ...... துணையேய அன்றிலு மன்றி துன்றுச ரங்க ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச அன்பொட லங்கல் ...... தரவேணும் வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா வெண்டர ளங்கள் தண்டைச தங்கை மின்கொடி லங்கு ...... கழலோனே கொன்றைய ணிந்த சங்கர ரன்று கும்பிட வந்த ...... குமரேசா குன்றிட அண்ட ரன்றுய வென்று குன்றமெ றிந்த ...... பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவிப்பதாக அமைந்தது.தென்றல், அலைகடல், நிலவு, மன்மதன், மலர்ப் பாணங்கள், அன்றில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1254 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, வந்து, வந்த, தந்த, என்னுடைய, மலர்ப், வெற்றி, அன்றில், அன்று, தென்றல், மன்றி, பெருமாளே, பொங்கி, கொடிய