நீதிக்கட்சியின் ஆட்சி
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் இந்திய அமைச்சர்களிடமே மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு என்ற நிலை தோன்றியது. இந்த தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராக கே.வி. ரெட்டி நாயுடுவும், காங்கிரஸ் தலைவராக சி. ராஜகோபாலாச்சாரியும் பொறுப்பு வகித்தனர். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டசபைக்கு 215 இடங்களில் 152 காங்கிரஸ் வெற்றிபெற்றது. சட்டமேலவையின் 46 இடங்களில் 26ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. 1937 ஜூலையில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. பல்வேறு சமூக முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை கொண்டுவந்த நீதிக்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1944 ஆம் ஆண்டு சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானங்கள்படி, "நீதிக்கட்சி" 'திராவிடர் கழகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீதிக்கட்சியின் ஆட்சி , வரலாறு, இந்திய, நீதிக்கட்சியின், ஆட்சி, காங்கிரஸ், ஆண்டு, நீதிக்கட்சி, இடங்களில், இந்தியா, தலைவராக, பொறுப்பு, தேர்தலில்