இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
காங்கிரசின் இரண்டாவது கட்ட போராட்டத்துக்கான களம் தயாராக இருந்தது. 1930 மார்ச் 12 ஆம் நாள் காந்தி தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையை தொடங்கினர். அவரால் தெரிவு செய்யப்பட்ட 79 சீடர்கள் பின் தொடர உப்பு சட்டங்களை மறுப்பதற்காக அவர் புறப்பட்டார். 200 மைல்கள் நடந்து 1930 மார்ச் 5 ம் நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார். ஏப்ரல் 6 ஆம் நாள் உப்புச் சட்டங்களை மீறியதன் மூலம் சட்ட மறுப்பு இயக்கத்தை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
![]() |
தன்டி யாத்திரை |
விரைவில் இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள், தொழிலாளர்கள், குடியானவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் காங்கிரசின் முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையிலடைத்தது.
வட்டமேசை மாநாடுகள் (1930 - 1932)
வட்டமேசை மாநாடுகளை கூட்டி பல்வேறு அரசியல் கட்சிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் சூழ்ச்சியை பிரிட்டிஷ் அரசு பின்பற்றியது. 1930 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்தது.
1931 ஜனவரியில் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு காங்கிரஸ் மீது விதித்திருந்த தடையை அரசு விலக்கியதோடு, தலைவர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்தது. 1931 மார்ச் 8 ஆம் நாள் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி மகாத்மா காந்தி சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவும் ஒப்புக் கொண்டார். 1931 செப்டம்பரில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. மகாத்மா காந்தி இதில் கலந்து கொண்டுவிட்டு பெருத்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார். முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சினை போன்றவற்றுக்கான எந்த தீர்வும் இந்த மாநாட்டில் காணப்படவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, காந்தி, வரலாறு, நாள், இயக்கம், மார்ச், தேசிய, சட்டங்களை, வட்டமேசை, மகாத்மா, அரசு, பிரிட்டிஷ், நாடு, வட்ட, இரண்டாம், மாநாட்டில், காங்கிரஸ், மேசை, கலந்து, பெண்கள், லண்டனில், ஏப்ரல், காங்கிரசின், யாத்திரை, தன்டி, இந்தியா, போராட்டத்துக்கான, தண்டி, மூலம், உப்புச், அவர், உப்பு, இயக்கத்தை